தஜ்வீத் - சாகின், தன்வின் விவரம்.

 சாகின்.


ஒரு எழுத்து சுகுன் (  ْ ) பெற்று வந்தால் அந்த எழுத்தை சாகின் என்று சொல்வர்.

அதாவது, اَنْ இதில் ن சுகூன் பெற்று இருப்பதால் இதனை ن சாகின் என்று சொல்வோம்.

 அதாவது, مِمْ இதில் م சுகூன் பெற்று இருப்பதால் இதனை م சாகின் என்று சொல்வோம்.

நூனே சாகினுக்கும் மீமே சாகினுக்கும் பிரத்யேகமாக சில சட்டங்கள் உள்ளன.

அவற்றை அடுத்து வரும் வகுப்புகளில் விரிவாக பார்ப்போம்.


தன்வின்


ً ،  ٍ ،  ٌ (ஃபதஹதைன், கஸரதைன், ளம்மதைன்) இவையே தன்வின் எனப்படும்.


உதாரணம்: ثًا ، دٍ ، نٌ ، يٍ ، شاً ، بٌ


(எப்போதும் ஒரு எழுத்து ً பெற்று வரும்போது அதனுடன் ஒரு ا துணையாக வரும்.

அதாவது, وًا ، كًا ، لًا ، جًا ، صًا



தன்வினுக்கும் நூனே சாகினுக்கும் உள்ள ஒற்றுமை:

தன்வின் ‘ன்’ என்ற சப்தத்தைக் குறிக்கும்.

قًا - க'ன்'

ثٍ – ஸி'ன்'

عٌ – உ'ன்'


நூனே சாகின்:

நூனே சாகினும் தன்வினை போல ‘ன்’ சப்தத்தைக் கொண்டு முடியும்.

اَنْ – அ'ன்'

خِنْ – க்ஹி'ன்'

ظُنْ- லு'ன்'


இதன் மூலம் நூனே சாகினும் தன்வினும் உருவத்தால் வேறுபட்டிருந்தாலும் உச்சரிப்பில் ஒரே மாதிரியாக உள்ளது என்பதை அறியலாம்.


மேலும் சில உதாரணங்கள்:

بًا = بَنْ - பன்

تٍ = تِنْ - தின்

لٌ = لُنْ – லுன்

مٌ = مُنْ - முன்

فٍ = فِنْ - ஃபின்

رًا = رَنْ – ரன்


தஜ்வீத் - சாகின், தன்வின் விவரம்.
தஜ்வீத் - சாகின், தன்வின் 

பயிற்சி:

1. குர்ஆனில் 5 நூனே சாகின் இடம்பெற்றுள்ள வார்த்தைகளையும் 5 தன்வின் இடம்பெற்ற வார்த்தைகளையும் கண்டறிக. 

2.கீழ்க்கண்டவற்றுள் நூனே சாகினுக்குப் பொருத்தமான தன்வினையும் தன்வினுக்குப் பொருத்தமான நூனே சாகினையும் எழுதவும்.

1. اَنْ 
2. بًا 
3. خَنْ
4. مٌ
5. يًا
6. شٍ
7. طِنْ
8. كُنْ
9. بُنْ
10. صٌ
11. قَنْ
12. ثَنْ
13. ظٍ
14. لًا
15. دُنْ







Post a Comment

1 Comments