தஜ்வீத் - மத்து எழுத்துக்களும் , சுகூன் பெற்ற ஹம்ஜாவும்.

மத்து எழுத்துக்கள்


மத்து என்றால் தமிழில் நீட்டுதல் என்று பொருள்.


மத்துடைய எழுத்துக்கள் (நீட்டல் எழுத்துக்கள்) மொத்தம் மூன்று. அவை ا ، و ، ي


அலிஃப் மத்தா:


எப்போதும் ( ا ) க்கு முன்னுள்ள எழுத்தின் ஹரகத் ஃபத்ஹா (  َ) வாக இருந்தால், அதாவது, باَ ، تاَ ، لاَ ، ماَ واَ இவ்வாறு இருந்தால் அதனை இரண்டு அலிஃப் அளவிற்கு நீட்டி ஓத வேண்டும்.


 உதாரணம்:

  • باَ பா
  • تاَ தா
  • ثاَ ஸா
  • جاَ ஜா
  • شاَ ஷா

இதுவே அலிஃப் மத்தா ஆகும்.


வாவ் மத்தா:


( و ) சுகூன் (  ْ) பெற்று அதற்கு முன்னுள்ள எழுத்தின் ஹரகத் ளம்மா (  ُ ) வாக இருந்தால், அதாவது, بُوْ ، تُوْ ، ثُوْ ، جُوْ ، شُوْ இவ்வாறு இருந்தால் அதனை இரண்டு அலிஃப் அளவிற்கு நீட்டி ஓத வேண்டும்.


உதாரணம்:

  • بُوْ பூ
  • تُوْ தூ
  • ثُوْ ஸூ
  • جُوْ ஜூ

இதுவே வாவ் மத்தா ஆகும்.


யா மத்தா:


( ي ) சுகூன் (  ْ ) பெற்று அதற்கு முன்னுள்ள எழுத்தின் ஹரகத் கஸ்ரா (  ِ ) வாக இருந்தால், அதாவது ,بِيْ ، تِيْ ، ثِيْ ، عِيْ ، صِيْ

இவ்வாறு இருந்தால் அதனை இரண்டு அலிஃப் அளவிற்கு நீட்டி ஓத வேண்டும்.


உதாரணம்:

  • بِيْ பீ
  • تِيْ தீ
  • ثِيْ ஸீ
  • جِيْ ஜீ

இதுவே யா மத்தா ஆகும்.


தஜ்வீத் - மத்து எழுத்துக்கள்



சுகூன் பெற்ற ஹம்ஜா


குர்ஆனில் சில இடங்களில் ஹம்ஜா ( ء ) அலிஃப் உடைய தோற்றத்திலும் ( أ ) ، சில இடங்களில் வாவ் உடைய தோற்றத்திலும் ( ؤ ) ، சில இடங்களில் யா உடைய தோற்றத்திலும் ( ئ ) வரும்.


உதாரணம்: بِئس يؤمِنُ ، كأس ،


இவ்வாறு வரும் போது இதனை சிறிதும் நீட்டாமல் ஒருவித அதிர்வுடன் ஃ சப்தத்தைக் கொடுத்து ஓத வேண்டும்.


யூமினு என்று ஓதாமல் யுஃமினு என்று ஓத வேண்டும்.

காஸ என்று ஓதாமல் கஃஸ என்று ஓத வேண்டும்.

பீஸ என்று ஓதாமல் பிஃஸ என்று ஓத வேண்டும்.


பயிற்சி:

கீழ்க்கண்ட வார்த்தைகளில் உள்ள மத்து எழுத்துக்களைக் கண்டறியவும்.


மத்து எழுத்துக்கள் அடங்கிய வார்த்தைகள்


Post a Comment

3 Comments