லிஹன் – பிழை
குர்ஆன் ஓதும் போது நாம் செய்யும் பிழைகளையே லிஹன் என்பர். இந்த லிஹன் இரு வகைப்படும்.
1. லிஹனே ஜலீ
2. லிஹனே ஹஃபீ
லிஹனே ஜலீ
• தெளிவாக தெரியும் பிழைகள்.
• இது குர்ஆன் வசனத்தின் பொருளையே மாற்றிவிடும்.
• ஆதலால் லிஹனே ஜலி, ஹராம் ஆகும்
வகைகள்:
i. மஹ்ரஜ்:
ஒரு எழுத்தின் மஹ்ரஜை (உச்சரிப்பை) மாற்றுவது.
உதாரணம்:
اَلْحَمْدُ – اَلْهَمْدُ
صَدَقَ – صَدَك
اَنْعَمْتَ – اَنْءَمْتَ
ii. கூட்டுதல்:
ஒரு எழுத்தைக் கூட்டி உச்சரித்தல்.
உதாரணம்:
اِيَّاكَ – اِيَّاكَا
اَعْبُدُ – اَعْبُدُوْ
iii. குறைத்தல்:
ஒரு எழுத்தைக் குறைத்து உச்சரிப்பது.
உதாரணம்:
اَلَّذِيْ – اَلَّذِ
اِنَّا – اِنَّ
iv. ஹரக்கத்தை மாற்றுதல்:
ஒரு எழுத்தின் ஹரக்கத்தை வேறு ஹரக்கத்தாக மாற்றி உச்சரிப்பது.
உதாரணம்:
جَعَلَ – جَعِلَ
رَجُلَ – رَجَلَ
v. ஹரக்கத்தை சுகூனாக மாற்றுதல்:
ஹரகத் ( َ ِ ُ ) பெற்ற எழுத்தை சுகூனாக ( ْ ) மாற்றி உச்சரிப்பது.
உதாரணம்:
لَهَبْ – لَهْبْ
خَلَقْ – خَلْقْ
vi. சுகூனை ஹரக்கத்தாக மாற்றுதல்:
சுகூன் ( ْ ) பெற்ற எழுத்தை ஹரக்கத்தாக மாற்றி உச்சரிப்பது.
உதாரணம்:
اَوْحِي – اَوَحِي
லிஹனே ஹஃபீ:
• தெளிவாகத் தெரியாத பிழைகள்.
• இவை வசனத்தின் பொருளை மாற்றாது.
• எனினும் இவை மக்ரூஹ் (விரும்பத்தகாதது) ஆகும்.
• நாம் தஜ்வீத் சட்டங்களில் செய்யும் பிழைகளே லிஹனை ஹஃபியில் அடங்கும்.
வகைகள்:
I. வல்லின மெல்லின மாற்றம்:
வல்லின உச்சரிப்பை மெல்லினமாகவும் மெல்லின உச்சரிப்பை வல்லினம் ஆகவும் மாற்றி உச்சரிப்பது.
உதாரணம்:
هُوَ اللهُ ، بِسْمِ الله
II. இழ்ஹார், இத்காம், இக்லாப், இக்ஃபா மாற்றம்:
நூனே சாகின் தன்வின் மற்றும் மீமே சாகின் போன்ற இடங்களில் வரக்கூடிய இழ்ஹார், இத்காம், இக்லாப், இக்ஃபா சட்டங்களை
மாற்றி ஓதுவது.
உதாரணம்:
لِمَنْ خَشِي
كِرَامٍ بَرَرَه
III. மத்து அளவில் மாற்றம்:
மத்துக்களை அதன் அளவிலிருந்து கூட்டியோ குறைத்தோ ஓதுவது.
லிஹன் |
0 Comments