தஜ்வீத் - எழுத்துக்களின் பிறப்பிடங்கள்

 بسم الله ارحمن الحيم 


எழுத்துகளின் பிறப்பிடங்கள்


அரபு எழுத்துகள் மொத்தம் ஐந்து இடங்களில் இருந்து உச்சரிக்கப்படுகின்றன.


அவை பின்வருமாறு:

1. الجَوْفُ

2. الحَلَقُ

3. اللِّساَنُ

4. اشَّفَتَانُ

5. الخَيْشُوْمُ



الجَوْفُ

வாய்க்கும் தொண்டைக்கும் இடையே உள்ள காலியான பகுதியே (الجَوْفُ)   எனப்படும்.

( الْجَوْفُ ) உடைய எழுத்துகள் மூன்று


அவை, ا ، و ، ي 


الحَلَقُ

தொண்டையிலிருந்து உச்சரிக்கப்படும் எழுத்துக்கள் (الحَلَقُ) என்று சொல்லப்படும்.


தொண்டை எழுத்துகள் ஆறு

அவை ء، ه ، ع ، ح ، غ ، خ 


இது மேல் தொண்டை , நடுத் தொண்டை, அடித் தொண்டை என மூன்று வகைப்படும்.


  • மேல் தொண்டை எழுத்துக்கள் : غ ، خ 
  • நடுத் தொண்டை எழுத்துக்கள்  : ع ، ح 
  • அடித் தொண்டை எழுத்துக்கள் : ء ، ه


اللِّساَنُ


நாவின் எழுத்துக்கள் (اللِّساَنُ) என்று சொல்லப்படும்.

நாவின் எழுத்துக்கள் மொத்தம் பதினெட்டு.


அவை, ق ، ك ، ج ، ش ، ي ، ض ، ل ، ن ، ر ، ت ، د ، ط ، ث ، ذ ، ظ ، س ، ز ، ص


இது நாவின் கடைசி பகுதி , நாவின் நடுப் பகுதி , நாவின் ஓரப் பகுதி மற்றும் நாவின் நுனிப் பகுதி என்று நான்கு வகைகளைக் கொண்டுள்ளது.


  • நாவின் கடைசிப் பகுதி எழுத்துக்கள் : ق ، ك 
  • நாவின் நடுப் பகுதி எழுத்துக்கள் : ج ، ش ، ي
  • நாவின் ஒரப் பகுதி எழுத்துக்கள் : ض
  • நாவின் நுனிப் பகுதி எழுத்துக்கள் : ت ، د ، ط ، ث ، ذ ، ظ ، ل ، ن ، ر ، س ، ز ، ص


اشَّفَتاَنُ

உதட்டில் இருந்து வெளியாகும் எழுத்துக்கள் (اشَّفَتاَنُ) என்று சொல்லப்படும்.


உதட்டில் இருந்து உச்சரிக்கப்பட வேண்டிய எழுத்துக்கள் மொத்தம் நான்கு.


அவை, ب ، م ، و ، ف 


الخَيْشُوْمُ


எழுத்துக்கள் : م ، ن

இந்த எழுத்துக்களை மூக்கில் மறைத்து உச்சரிக்க வேண்டும்.


அரபு எழுத்துக்களின் பிறப்பிடங்கள்
அரபு எழுத்துக்களின் பிறப்பிடங்கள்






அரபு எழுத்துக்களின் பிறப்பிடங்கள்
அரபு எழுத்துக்களின் பிறப்பிடங்கள்


பயிற்சி:

  1. நடுத் தொண்டையின் எழுத்துக்கள் யாவை?
  2. நாவின் கடைசி பகுதியின் எழுத்துக்கள் யாவை?
  3. உதட்டு எழுத்துக்கள் யாவை?
  4. வாயின் காலியான இடத்தில் இருந்து உச்சரிக்கப்படுகின்றன எழுத்துக்கள் யாவை?
  5. اَشَّفَتَانُ என்றால் என்ன?
  6. கீழ்க்கண்ட சொற்களில் உள்ள தொண்டையின் எழுத்துக்களைக் கண்டறியவும்.
தொண்டையின் எழுத்துக்களைக் கண்டறியவும்
தொண்டையின் எழுத்துக்களைக் கண்டறியவும்


கீழ்க்கண்ட சொற்களில் உள்ள நாவின்  எழுத்துக்களைக் கண்டறியவும்.

நாவின் எழுத்துக்களைக் கண்டறியவும்



Post a Comment

3 Comments

  1. Masha allah😍... it is very usefull

    ReplyDelete
  2. Alahmdhulilah....second class completed🥰🤩

    ReplyDelete
  3. Jazakallah khairan 😊
    That's so easy to understand

    ReplyDelete