தஜ்வீத் - வக்ஃப் சட்டங்களும், நிறுத்தல் குறியீடுகளும்.

 வக்ஃப் சட்டங்கள்:


ஒரு வசனம் முடியும் போது வட்டம் போல் இருக்கும் இந்த குறியீட்டை வக்ஃப் என்போம். 


வக்ஃப் செய்து நிறுத்தும்போது, அதற்கு முன் உள்ள எழுத்தைக் கொண்டே எவ்வாறு நிறுத்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.


1. வக்ஃப் க்கு முன்னுள்ள உள்ள எழுத்து ஃபத்ஹா (  َ ), கஸ்ரா (   ِ  ), ளம்மா (   ُ  ), கஸரதைன்(  ٍ ), ளம்மதைன்(   ٌ ), நிற்கும் கஸ்ரா நிற்கும் ளம்மா ஆகியன பெற்று வந்தால் அந்த எழுத்தின் ஹரகத்தை சுகூன் (  ْ ) ஆக மாற்றி வக்ஃப் செய்து நிறுத்த வேண்டும்.


உதாரணம்

اَبَابِيْلَ ○ – اَبَابِيْلْ

الْفِيْلِ ○ – الْفِيْلْ

خَوْفٍ ○ – خَوْفْ


2. வக்ஃப் க்கு முன்னுள்ள உள்ள எழுத்து நிற்கும் ஃபத்ஹா (  َ ), சுகூன் (  ْ ) ஆகியன பெற்று வந்தால் அதனை எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே உச்சரிக்க வேண்டும்.


உதாரணம்:

○ عَبَدْتُّمْ 

○الذِّكْرَىٰ 


3. வக்ஃப் க்கு முன்னுள்ள உள்ள எழுத்து ஃபதஹதைன் (  ً) பெற்று வந்தால் அதனை அலிஃப் மத்தாவாக மாற்றி உச்சரிக்க வேண்டும்.


உதாரணம்:

 سَبَبًا ○ – سَبَبَا

تَوَّابًا ○ – تَوّابَا


4. வக்ஃப் க்கு முன்னுள்ள உள்ள எழுத்து தாவுல் மர்பூதா ( ة ) பெற்று வந்தால் அதனை ه வாக மாற்றி சுகூன் கொடுத்து உச்சரிக்க வேண்டும்.


உதாரணம்:


لُمَزَهْ - لُّمَزَةٍ


வக்ஃப் சட்டங்கள்
வக்ஃப் சட்டங்கள்

குர்ஆனில் வசனங்களுக்கு இடையில் சிறிய அளவில்  م ج போன்ற குறியீடுகள் வரும். அவ்வாறு வந்தால் எப்படி ஓத வேண்டும் என்பதை இந்த அட்டவணையில் பார்ப்போம்.


நிறுத்தல் குறியீடுகள்
நிறுத்தல் குறியீடுகள்
 

பயிற்சி:

குர்ஆனில் இருந்து அனைத்து வகையான நிறுத்தம சட்டங்களுக்கு 2 உதாரணங்களைக் கண்டறிக.



Post a Comment

0 Comments