லாம் சாகின் சட்டம்
சுகூன் பெற்ற லாம் ( لْ ) லாம் சாகின் எனப்படும்.
லாம் சாகினை இரு வகையாக ஓத வேண்டும்.
1. இத்ஙாம்
2. இழ்ஹார்
1. இத்ஙாம்:
இத்ஙாம் என்றால் இணைத்தல் என்று பொருள்.
லாம் சாகினை கீழ்க்கண்ட சட்டங்களின் அடிப்படையில் இத்ஙாம் செய்து ஓத வேண்டும்.
- சுகூன் பெற்ற லாமிற்கு ( لْ ) பின் ஷத்தா பெற்ற லாம் ( لّ ) வந்தால் அந்த இரண்டு லாமையும் இத்ஙாம் செய்து ( ஒன்றாக இணைத்து ) ஓத வேண்டும்.
- சுகூன் பெற்ற லாமிற்கு ( لْ ) பின் ஷத்தா பெற்ற ரா ( رّ ) வந்தால் அந்த லாமையும் ராவையம் இத்ஙாம் செய்து ( ஒன்றாக இணைத்து ) ஓத வேண்டும்.
- மக்ரிபா உடைய அலிஃப் லாம் ( ال ) ற்கு பின் ஷம்ஸிய்யா உடைய பதினான்கு எழுத்துக்களில் ஏதேனும் ஒன்று வந்தால் இணைத்து ஓத வேண்டும.
உதாரணம்: يَجْعَلْ لَّكُمْ ، وَقُلْ رَّبِّ ، اَلتَّكَاثُرْ
2. இழ்ஹார்:
இழ்ஹார் என்றால் வெளிப்படுத்துதல் என்று பொருள்.
லாம் சாகினை கீழ்க்கண்ட சட்டங்களின் அடிப்படையில் இழ்ஹார் செய்து ஓத வேண்டும்.
- லாம் சாகினை ( لْ ) அடுத்து ஷத்தா பெற்ற லாம், ராவைத் தவிர்த்து வேறு எந்த எழுத்து வந்தாலும் சுகூன் பெற்ற லாமை தெளிவாக வெளிப்படுத்தி ஓத வேண்டும்.
- மக்ரிபா உடைய அலிஃப் லாம் ( ال ) ற்கு பின் கமரிய்யா உடைய பதினான்கு எழுத்துக்களில் ஏதேனும் ஒன்று வந்தால் லாமை தெளிவாக வெளிப்படுத்தி ஓத வேண்டும்.
உதாரணம்: اَلْحَمْدُ ، وَالْاَرْضِ
லாம் சாகின் - தஜ்வீத் அல் குர்ஆன் |
பயிற்சி:
0 Comments