மத்தின் வகைகள்:
மத்து அதன் தன்மை, நீட்டல் அளவு போன்ற காரணங்களினால் பல்வேறு வகைகளைப் பெற்றுள்ளது.
அந்த வகைகளின் அடிப்படையில் எழுத்துக்களை 2 முதல் 6 ஹரகத் அளவிற்கு நீட்டி ஓத வேண்டும்.
மத்தின் வகைகள்:
- மத்து அஸ்லி / தபயீ
- மத்து முத்தஸில்
- மத்து முன்ஃபஸில்
- மத்து லீன்
- மத்து இவத்
- மத்து பதல்
- மத்து ஹர்ஃபீ
- மத்து லாஜிம்
- மத்து சிலா
- மத்து ஆரிழ்
1. மத்து அஸ்லீ/தபயீ:
மத்துடைய எழுத்துக்கள் ( ا و ي) சுகூன் பெற்று அதற்கு முன்னுள்ள எழுத்து அதே உச்சரிப்பைப் பெற்ற ஹரகத்தைக் கொண்டு வருவது மத்து அஸ்லீ ஆகும்.
இதனை இரண்டு ஹரகத் அளவு நீட்ட வேண்டும்.
உதாரணம்: بَابٌ ، نَجِيْمٌ ، يُوْنُسٌ
2. மத்து முத்தஸில்:
ஒரு வார்த்தையின் நடுவில் மத்துடைய எழுத்து வந்து அதற்கு அடுத்த எழுத்து ء வருமானால் அது மத்து முத்தஸில் ஆகும்.
மத்து முத்தஸிலை நான்கு ஹரகத் அளவு நீட்ட வேண்டும்
உதாரணம்: شَآءَ , جَآءَ
3. மத்து முன்ஃபஸில்:
ஒரு வார்த்தையின் இறுதியில் மத்துடைய எழுத்து வந்து அதற்கு அடுத்த வார்த்தையில் ء வருமானால் அது மத்து முன்ஃபஸில் ஆகும்.
மத்து முன்ஃபஸிலை நான்கு ஹரகத் அளவு நீட்ட வேண்டும்.
உதாரணம்: اِنَّآ اَنْزَلْنَاهُ
4. மத்து லீன்:
வக்ஃப் செய்ய வேண்டிய இடத்தில் கடைசி எழுத்திற்கு முன் உள்ள எழுத்து லீன் எழுத்தின் சட்டத்தைப் பெற்றிருந்தால் அதனை நீட்டி உச்சரிக்க வேண்டும்.
லீன் மத்தாவை 2 அல்லது 4 அல்லது 6 ஹரகத் அளவிற்கு நீட்டி உச்சரிக்க வேண்டும்.
உதாரணம்: ○خَوْفٍ ○، قُرَيْشٍ
5. மத்து இவத்:
வக்ஃப் நிலையில், ஃபதஹதைன் வந்தால் அதனை அலிஃப் மத்தாவாக மாற்றி உச்சரிப்பதே மத்து இவத் ஆகும்.
இதனை இரண்டு அலிஃப் அளவு நீட்ட வேண்டும்.
உதாரணம்: ○حُسْنًا○ اَفْوَاجًا
6. மத்து பதல்:
மத்துடைய எழுத்து( ا و ي) க்கு முன் ஹம்ஜா வந்தால் அது மத்து பதல் ஆகும்.
இதனை இரண்டு அலிஃப் அளவிற்கு நீட்ட வேண்டும்.
உதாரணம்: إِيْلاَفِ , أُوْتُوْا
மத்து வகைகள் |
0 Comments