اتجويد
بسم الله الرحمان ارحيم
வல்லின மெல்லின எழுத்துகள் :
தமிழைப் போலவே அரபியிலும் எழுத்துகளை வல்லினமாகவும் (تفخيم) மெல்லினமாகவும் (ترفيق) பிரிக்கலாம். சில எழுத்துகளை இரு வகையிலும் ஓதலாம்.
أحكام التفحيم
خ ، ص ، ض ، غ ، ط ، ق ، ظ
இந்த 7 எழுத்துகளையும் வாயை வட்ட வடிவில் குவித்து வைத்து வல்லினமாக உச்சரிக்க வேண்டும்.
أحكام الترفيق
ب ، ت ، ث ، ج ، ح ، د ، ذ ، ز ، س ، ش ، ع ، ف ، ك ، م ، ن ، و ، ه ، ي
இந்த 18 எழுத்துகளையும் வாயை தட்டை வடிவில் வைத்து மெல்லினமாக உச்சரிக்க வேண்டும்.
உதாரணம்:
- َخاَب
- َطَلَق
- َصَال
இவை அல்லாமல் சில எழுத்துக்களை சில இடங்களில் வல்லினமாகவும் சில இடங்களில் மெல்லினமாகவும் உச்சரிக்க வேண்டும்.
அவை : ا ، ر ، الله - ل
அரபு - வல்லின மெல்லின எழுத்துக்கள் |
அலிஃப் சட்டம் :
அலிஃப்' ஐ வல்லினமாக உச்சரிக்க வேண்டுமா அல்லது மெல்லினமாக உச்சரிக்க வேண்டுமா என்பதை அதற்கு முன்னுள்ள எழுத்தைக் கொண்டே தீர்மானிக்க வேண்டும்.
அலிஃப் க்கு முன்னுள்ள எழுத்து வல்லின எழுத்தாக இருந்தால் அலிஃப் ஐ வல்லினமாக ஓத வேண்டும் .
உதாரணம் :
- َطَال
- َقَال
அலிஃப் க்கு முன்னுள்ள எழுத்து மெல்லின எழுத்தாக இருந்தால் அந்த அலிஃப் ஐ மெல்லினமாக ஓத வேண்டும்.
உதாரணம் :
- َمَال
- نَاس
அல்லாஹ் ( الله) வில் உள்ள (ل) சட்டம்:
( الله ) என்ற வார்த்தையில் உள்ள ل'ஐ வல்லினமாக உச்சரிக்க வேண்டுமா அல்லது மெல்லினமாக உச்சரிக்க வேண்டுமா என்பதை அதற்கு முன்னுள்ள எழுத்தின் ஹரகத்தைக் கொண்டே தீர்மானிக்க வேண்டும்.
(الله) என்ற வார்த்தைக்கு முன் உள்ள எழுத்தின் ஹரகத் ஃபத்ஹா( َ) அல்லது ளம்மா ( ُ) பெற்றிருந்தால் அந்த (الله) வை வல்லினமாக ஓத வேண்டும்.
உதாரணம்:
- سُبْحَانَ الله
- رَسُوْلُ الله
الله என்ற வார்த்தைக்கு முன் உள்ள எழுத்தின் ஹரகத் கஸ்ரா ( ِ ) பெற்றிருந்தால் அந்த ( الله) வை மெல்லினமாக ஓத வேண்டும்.
உதாரணம்:
- بسْمِ الله
- اَلْحَمْدُ لِله
(ر ) சட்டம் :
( ر ) வை வல்லினமாக உச்சரிக்க வேண்டுமா அல்லது மெல்லினமாக உச்சரிக்க வேண்டுமா என்பதை ( ر ) வின் ஹரகத்தைக் கொண்டே தீர்மானிக்க வேண்டும்.
( ر ) ஹரகத் பெறாமல் சுகூன் பெற்றிருக்கும் பட்சத்தில் அதற்கு முன்னுள்ள எழுத்தின் ஹரகத்தைக் கொண்டு தீர்மானிக்க வேண்டும்.
( ر ) ஹரகத் பெறாமல் சுகூன் பெற்றிருக்கும் பட்சத்தில் அதற்கு முன்னுள்ள எழுத்தும் சுகூன் பெற்றிருந்தால் அதற்கும் முன்னுள்ள எழுத்தின் ஹரகத்தைக் கொண்டு தீர்மானிக்க வேண்டும்.
ரா’வின் வல்லின சட்டங்கள்:
(ر ) வின் முன்னுள்ள எழுத்தின் ஹரகத்
- ஃபத்ஹா ( َ )
- ளம்மா( ُ)
- ஃபதஹதைன் ( ً)
- ளம்மதைன் ( ٌ )
பெற்றிருந்தால் (ر) வை வல்லினமாக உச்சரிக்க வேண்டும்.
உதாரணம்:
- رَزَقْناَ
- رُبَماَ
(ر ) சுகுன் பெற்று அதற்கு முன்னுள்ள எழுத்தின் ஹரகத்
- ஃபத்ஹா ( َ )
- ளம்மா( ُ)
பெற்றிருந்தால் (ر) வை வல்லினமாக உச்சரிக்க வேண்டும்.
உதாரணம்:
- اَرْسَلْناَ
- قُرْانٌ
( ر ) சுகுன் பெற்று அதற்கு முன்னுள்ள எழுத்தும் சுகுன் பெற்று அதற்கு முன்னுள்ள எழுத்தின் ஹரகத்
- ஃபத்ஹா ( َ )
- ளம்மா ( ُ )
பெற்றிருந்தால் (ر) வை வல்லினமாக உச்சரிக்க வேண்டும்.
உதாரணம்:
- خُسْرْ
(ر ) ஷத்து பெற்று ,
- ஃபத்ஹா ( َ )
- ளம்மா ( ُ )
பெற்றிருந்தால் ( ر ) வை வல்லினமாக ஓத வேண்டும்.
உதாரணம்:
- بِرَّ
ரா’ வின் மெல்லின சட்டங்கள் :
(ر ) வின் முன்னுள்ள எழுத்தின் ஹரகத்
- கஸ்ரா ( ِ )
- கஸ்ரதைன் ( ٍ )
பெற்றிருந்தால் ( ر ) வை மெல்லினமாக உச்சரிக்க வேண்டும்.
உதாரணம்:
- رِجَالٌ
( ر ) சுகுன் பெற்று அதற்கு முன்னுள்ள எழுத்தின் ஹரகத்
- கஸ்ரா ( ِ )
பெற்றிருந்தால் ( ر ) வை மெல்லினமாக உச்சரிக்க வேண்டும்.
உதாரணம்:
- اَنْذِرْ
( ر ) சுகுன் பெற்று அதற்கு முன்னுள்ள எழுத்தும் சுகுன் பெற்று அதற்கு முன்னுள்ள எழுத்தின் ஹரகத்
- கஸ்ரா ( ِ )
பெற்றிருந்தால் (ر) வை மெல்லினமாக உச்சரிக்க வேண்டும்.
உதாரணம்:
- بَصِيْرْ
பெற்றிருந்தால் ( ر ) வை மெல்லினமாக ஓத வேண்டும்.
உதாரணம்:
- بَرِّ
( ر ) சுகுன் பெற்று அதற்கு முன்னுள்ள எழுத்து சுகுன் பெற்ற ( ي ) வாக இருந்தால் அந்த ரா’ வை மெல்லினமாக ஓத வேண்டும்.
உதாரணம்:
- خَيْرْ
பயிற்சி:
கீழ்க்கண்ட அட்டவணையில் உள்ள வார்த்தைகளில் அலிஃப் ஐ எங்கு வல்லினமாக எங்கு மெல்லினமாக உச்சரிக்க வேண்டும் என்று கண்டறியவும்.
கீழ்க்கண்ட அட்டவணையில் உள்ள வார்த்தைகளில் الله வை எங்கு வல்லினமாக எங்கு மெல்லினமாக உச்சரிக்க வேண்டும் என்று கண்டறியவும்.
கீழ்க்கண்ட அட்டவணையில் உள்ள வார்த்தைகளில் ر வை எங்கு வல்லினமாக எங்கு மெல்லினமாக உச்சரிக்க வேண்டும் என்று கண்டறியவும்.
1 Comments
Masha allah😍👍
ReplyDelete