நூனே சாகின் தன்வின் சட்டங்கள்:
அல்ஹம்துலில்லாஹ் முந்தைய வகுப்பில் நூனே சாகின் தன்வினுடைய இழ்ஹார் , இக்ஃபா சட்டங்களைப்பார்த்தோம்.
இப்போது, மீதம் உள்ள சட்டங்களைப் பார்ப்போம்.
இத்ஙாம்:
இத்ஙாம் என்றால் இணைத்தல் என்று பொருள்.
இத்ஙாம் இரண்டு வகைப்படும்.
1. இத்ஙாம் பில் குன்னா
2. இத்ஙாம் பிலா குன்னா
இத்ஙாம் பில் குன்னா:
இத்ஙாம் பில் குன்னாவின் எழுத்துக்கள் மொத்தம் நான்கு.
அவை: ي و م ن
இத்ஙாம் பில் குன்னா என்றால் இணைத்து குன்னா உடன் ஓதுவது என்று பொருள்.
அதாவது, ஒரு வார்த்தையின் இறுதியில் நூனே சாகின் அல்லது தன்வின் வந்து அதன் அடுத்த எழுத்து இத்ஙாம் பில் குன்னாவின் ஏதேனும் ஒரு எழுத்தாக இருந்தால், நூனே சாகின்/தன்வினுடைய ‘ன்’ சப்தத்தை அதனுடன் சேரும் எழுத்திற்குத் தக்கவாறு இணைத்து மூக்கில் மறைத்து குன்னா செய்து ஓத வேண்டும்.
நூனே சாகின் / தன்வினுடன் ي சேர்ந்தால் ‘ய்’ என்றும்,
நூனே சாகின் / தன்வினுடன் و சேர்ந்தால் ‘வ்’ என்றும்,
நூனே சாகின் / தன்வினுடன் م சேர்ந்தால் ‘ம்’ என்றும்,
நூனே சாகின் / தன்வினுடன் ن சேர்ந்தால் ‘ன்’ என்றும்
இணைத்து குன்னா செய்து உச்சரிக்க வேண்டும்.
உதாரணம்:
مِنْ يَوْمِ - மய்(ங்) யவ்மி
اِلاَهًا وَّاحِدَا - இலாஹவ்(ங்) வாஹிதா
عاَمِلَةٌ نَّاصِبَةٌ - ஆமிலதுன்(ங்) நாஸிபா
குறிப்பு: பொதுவாக மூக்கில் மறைத்து குன்னா செய்யும் போது ‘ங்’ என்ற சப்தம் வரவேண்டும்.
இத்ஙாம் பிலா குன்னா:
இத்ஙாம் பிலா குன்னாவின் எழுத்துக்கள் மொத்தம் இரண்டு
அவை: ل ، ر
இத்ஙாம் பிலா குன்னா என்றால் இணைத்து குன்னா இல்லாமல் ஓத வேண்டும் என்று பொருள்.
அதாவது, ஒரு வார்த்தையின் இறுதியில் நூனே சாகின் அல்லது தன்வின் வந்து அதன் அடுத்த எழுத்து இத்ஙாம் பிலா குன்னாவின் ஏதேனும் ஒரு எழுத்தாக இருந்தால், நூனே சாகின்/தன்வினுடைய ‘ன்’ சப்தத்தை அதனுடன் சேரும் எழுத்திற்குத் தக்கவாறு இணைத்து ஓத வேண்டும்.
நூனே சாகின் / தன்வினுடன் ل சேர்ந்தால் ‘ல்’ என்றும்,
நூனே சாகின் / தன்வினுடன் ر சேர்ந்தால் ‘ர்’ என்றும்,
இணைத்து உச்சரிக்க வேண்டும்.
உதாரணம்:
كُلٌّ لَهُ குல்லுல்லஹு
مِنْ رَّبِّكَ மிர்ரப்பிக்க
இதனை குன்னா இல்லாமல் ஓத வேண்டும்.
இக்லாப்:
இக்லாப் என்றால் மாற்றுதல் என்று பொருள்.
இக்லாப் உடைய எழுத்து ب
அதாவது, ஒரு வார்த்தையின் இடையிலோ கடைசியிலோ நூனே சாகின் / தன்வினுக்கு அடுத்து ب வந்தால் நூனே சாகின்/தன்வினின் 'ன்' சப்தத்தை م ஆக மாற்றி ‘ம்’ என்ற சப்தம் கொடுத்து மூக்கில் மறைத்து (குன்னா செய்து) உச்சரிக்க வேண்டும்.
உதாரணம்:
مَنْ بَخِل மம் பஹில
كِرَامٍ بَرَرَةٍ கிராமிம் பரரஹ்
குறிப்பு:
- பொதுவாக م ஐ குன்னா செய்யும் போது ‘ங்’ என்ற சப்தம் வராது. (ஆனால் மூக்கில் மறைத்து ஓத வேண்டும்.)
- நூனே சாகின் / தன்வினின் இக்லாப் உடைய நிலையில் ب க்கு முன்னுள்ள சிறிய م கொடுக்கப்பட்டிருக்கும். அதன் மூலம் எளிமையாக கண்டறியலாம்.
தஜ்வீத் - நூனே சாகின் தன்வின் - இத்ஙாம், இக்லாப் |
- நூனே சாகின் என்றால் என்ன?
- நூனே சாகின் இத்ஙாம் பில் குன்னா, இத்ஙாம் பிலா குன்னா ஆகியவற்றிற்கு குர்ஆனில் தேடி 5 உதாரணங்களை கண்டறியவும்.
- நூனே சாகின் இக்லாப் க்கு குர்ஆனில் தேடி 5 உதாரணங்களை கண்டறியவும்.
1 Comments
Masha allah😍👍
ReplyDelete