மத்து வகைகள் - தஜ்வீத் அல் குர்ஆன்
7. மத்து ஹர்ஃபீ
இது சூராவின் ஆரம்பத்தில் தனித்து வரும்.
மத்து ஹர்ஃபீ யின் எழுத்துக்கள் மொத்தம் ஐந்து.
அவை : ح ي ط ه ر
இதனை இரண்டு ஹரகத் அளவு நீட்ட வேண்டும்.
உதாரணம்: حم , يس
8. மத்து லாஜிம்:
மத்து லாஜிம் இரண்டு வகைப்படும்.
8.1. மத்து லாஜிம் கலமீ :
ஒரு வார்த்தையில் மத்துடைய எழுத்துக்குப்பின் ஷத்தா அல்லது சுகூன் வந்தால் அதனை 6 ஹரகத் அளவிற்கு நீட்டி ஓத வேண்டும்.
உதாரணம்: ضَّالِّيْنَ○ حَآجُّوْكَ
8.2. மத்து லாஜிம் ஹர்ஃபீ:
சூராக்களின் ஆரம்பத்தில் ஹரகத் அற்று தனித்து வரும்.
மத்து ஹர்ஃபீ உடைய ஐந்து எழுத்துக்களைத் தவிர்த்து மற்ற அனைத்து எழுத்துக்களும் மத்து லாஜிம் ஹர்ஃபீ உடைய எழுத்துக்கள் ஆகும்.
இதனை 6 ஹரகத் அளவிற்கு நீட்ட வேண்டும்.
உதாரணம்: ألم ، ن ، ق
குறிப்பு: م ஐ நீட்டும் போது சிறிது மூழ்கினால் மறைத்து குன்னா செய்ய வேண்டும்.
9.மத்து ஸிலா:
9.1 மத்து ஸிலா சுக்ரா:
ஒரு வார்த்தையின் இறுதியில் ه கஸ்ரா அல்லது ளம்மா பெற்று வந்து அடுத்த வார்த்தையின் ஆரம்பத்தில் ஹம்ஜாவைத் தவிர்த்து பிற எழுத்துக்கள் வந்தால் அது மத்து ஸிலா குப்ரா ஆகும்.
இதனை இரண்டு அலிஃப் அளவிற்கு நீட்ட வேண்டும்.
உதாரணம்: واُمِّه وَاَبِيْه
9.2 மத்து ஸிலா குப்ரா:
ஒரு வார்த்தையின் இறுதியில் ه கஸ்ரா அல்லது ளம்மா பெற்று வந்து அடுத்த வார்த்தையின் ஆரம்பத்தில் ஹம்ஜா வந்தால் அது மத்து ஸிலா குப்ரா ஆகும்.
இதனை இரண்டு அல்லது நான்கு அல்லது ஐந்து அலிஃப் அளவிற்கு நீட்ட வேண்டும்.
உதாரணம்: وَثَاقَهُ اَحَد ، بِهِ اِلَّا
10. மத்து ஆரிழ்:
மத்து ஆரிழ் இரண்டு வகைப்படும்.
10.1. ஆரிழ் சுமூன்:
வக்ஃப் உடைய நிலையில் சுகூன் வைத்து முடிப்பதையேமுடிப்பதே ஆரிழ் சுமூன் எனப்படும்.
உதாரணம்: ○ خَلَقَ
10.2. ஆரிழ் சுகூன்:
வக்ஃப் செய்ய வேண்டிய இடத்தில் கடைசி எழுத்திற்கு முன் உள்ள எழுத்து மத்து அஸ்லீயின் சட்டத்தைப் பெற்றிருந்தால் அதனை நீட்டி உச்சரிக்க வேண்டும்.
மத்து ஆரிழ் சுகூனை 2 அல்லது 4 அல்லது 6 ஹரகத் அளவிற்கு நீட்ட வேண்டும்.
உதாரணம்: ○ بِرَبِّ النَّسِ ○ماَ عُوْنَ
மத்து வகைகள் - தஜ்வீத் அல் குர்ஆன் |
0 Comments