மத்து எழுத்துக்கள்
மத்து என்றால் தமிழில் நீட்டுதல் என்று பொருள்.
மத்துடைய எழுத்துக்கள் (நீட்டல் எழுத்துக்கள்) மொத்தம் மூன்று. அவை ا ، و ، ي
அலிஃப் மத்தா:
எப்போதும் ( ا ) க்கு முன்னுள்ள எழுத்தின் ஹரகத் ஃபத்ஹா ( َ) வாக இருந்தால், அதாவது, باَ ، تاَ ، لاَ ، ماَ واَ இவ்வாறு இருந்தால் அதனை இரண்டு அலிஃப் அளவிற்கு நீட்டி ஓத வேண்டும்.
உதாரணம்:
- باَ பா
- تاَ தா
- ثاَ ஸா
- جاَ ஜா
- شاَ ஷா
இதுவே அலிஃப் மத்தா ஆகும்.
வாவ் மத்தா:
( و ) சுகூன் ( ْ) பெற்று அதற்கு முன்னுள்ள எழுத்தின் ஹரகத் ளம்மா ( ُ ) வாக இருந்தால், அதாவது, بُوْ ، تُوْ ، ثُوْ ، جُوْ ، شُوْ இவ்வாறு இருந்தால் அதனை இரண்டு அலிஃப் அளவிற்கு நீட்டி ஓத வேண்டும்.
உதாரணம்:
- بُوْ பூ
- تُوْ தூ
- ثُوْ ஸூ
- جُوْ ஜூ
இதுவே வாவ் மத்தா ஆகும்.
யா மத்தா:
( ي ) சுகூன் ( ْ ) பெற்று அதற்கு முன்னுள்ள எழுத்தின் ஹரகத் கஸ்ரா ( ِ ) வாக இருந்தால், அதாவது ,بِيْ ، تِيْ ، ثِيْ ، عِيْ ، صِيْ
இவ்வாறு இருந்தால் அதனை இரண்டு அலிஃப் அளவிற்கு நீட்டி ஓத வேண்டும்.
உதாரணம்:
- بِيْ பீ
- تِيْ தீ
- ثِيْ ஸீ
- جِيْ ஜீ
இதுவே யா மத்தா ஆகும்.
சுகூன் பெற்ற ஹம்ஜா
குர்ஆனில் சில இடங்களில் ஹம்ஜா ( ء ) அலிஃப் உடைய தோற்றத்திலும் ( أ ) ، சில இடங்களில் வாவ் உடைய தோற்றத்திலும் ( ؤ ) ، சில இடங்களில் யா உடைய தோற்றத்திலும் ( ئ ) வரும்.
உதாரணம்: بِئس يؤمِنُ ، كأس ،
இவ்வாறு வரும் போது இதனை சிறிதும் நீட்டாமல் ஒருவித அதிர்வுடன் ஃ சப்தத்தைக் கொடுத்து ஓத வேண்டும்.
யூமினு என்று ஓதாமல் யுஃமினு என்று ஓத வேண்டும்.
காஸ என்று ஓதாமல் கஃஸ என்று ஓத வேண்டும்.
பீஸ என்று ஓதாமல் பிஃஸ என்று ஓத வேண்டும்.
பயிற்சி:
கீழ்க்கண்ட வார்த்தைகளில் உள்ள மத்து எழுத்துக்களைக் கண்டறியவும்.
3 Comments
Masha allah😍👍
ReplyDeleteJazakallahu khairan! ❤
DeleteAlhamdhulilah
ReplyDelete