கல்கலா சட்டம் - தஜ்வீத்

 கல்கலா சட்டம்


கல்கலா என்றால் அசைத்தல் என்று பொருள்.


அதாவது சில எழுத்துக்கள் சுகூன் ْ ) பெற்ற நிலையிலோ அல்லது வக்ஃப் ( ஆயத்தை முடிக்கும் இடம் ) உடைய இடத்திலோ வரும்பொழுது அதனை அசைத்து ஓத வேண்டும்.


அவ்வாறு ஓதுவதற்கான சட்டங்களே கல்கலா எனப்படும்.


கல்கலா உடைய எழுத்துக்கள் மொத்தம் ஐந்து.


அவை ق ، ط ، ب ، ج ، د


கல்கலா இரண்டு வகைப்படும்

அவை


கல்கலா சுக்ரா ( குறைவாக அசைத்தல் )

• கல்கலா குப்ரா ( அதிகமாக அசைத்தல் )


கல்கலா சுக்ரா:


கல்கலா உடைய எழுத்துக்களான ق ، ط ، ب ، ج ، د சுகூன் பெற்ற நிலையில் ஒரு வார்த்தைக்கு நடுவில் வந்தால் அதனை குறைவாக அசைத்து ஓத வேண்டும்.


அதாவது قدْحاً இதில் கல்கலாவின் எழுத்துக்களில் ஒன்றான د சுகூன் பெற்ற நிலையில் வார்த்தையின் நடுவில் வந்துள்ளதால் இந்த دசிறிது அசைத்து ஓத வேண்டும்.


கல்கலா குப்ரா:


கல்கலா உடைய எழுத்துக்களான ق ، ط ، ب ، ج ، د ஒரு வசனத்தின் கடைசியில் வந்தால் அதனை அதிகமாக அசைத்து ஓத வேண்டும்.

قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ


இதில் கல்கலாவின் எழுத்துக்களில் ஒன்றான ق வசனத்தின் முடிவில் வந்துள்ளதால் அந்த قநன்றாக அசைத்து ஓத வேண்டும்.


அதாவது ஃபலக் என்று சாதாரணமாக ஓதாமல் ஃபலக்(கு) என்று ق சப்தத்தை நன்றாக அசைத்து ஓத வேண்டும்.


கல்கலா எழுத்துக்கள்


கல்கலா அல்லாத மற்ற எழுத்துக்களின் சட்டம்:


இந்த ஐந்து எழுத்துக்கள் அல்லாமல் வேறு எந்த எழுத்துக்கள் சுகூன் பெற்ற நிலையிலோ அல்லது வக்ஃப் உடைய நிலையிலோ வருவாயின் அவற்றை சிறிதும் அசைக்காமல் விரைவாக ஓத வேண்டும்.


பயிற்சி:


கல்கலா உடைய ஐந்து எழுத்துக்களையும் வைத்து 5 உதாரணங்களை எழுதவும்.

கீழ்க்கண்டவற்றில் உள்ள கல்கலா சட்டம் அடங்கிய வார்த்தைகளைக் கண்டறியவும்.


கல்கலா வார்த்தைகள்



Post a Comment

1 Comments