சாகின்.
ஒரு எழுத்து சுகுன் ( ْ ) பெற்று வந்தால் அந்த எழுத்தை சாகின் என்று சொல்வர்.
அதாவது, اَنْ இதில் ن சுகூன் பெற்று இருப்பதால் இதனை ن சாகின் என்று சொல்வோம்.
அதாவது, مِمْ இதில் م சுகூன் பெற்று இருப்பதால் இதனை م சாகின் என்று சொல்வோம்.
நூனே சாகினுக்கும் மீமே சாகினுக்கும் பிரத்யேகமாக சில சட்டங்கள் உள்ளன.
அவற்றை அடுத்து வரும் வகுப்புகளில் விரிவாக பார்ப்போம்.
தன்வின்
ً ، ٍ ، ٌ (ஃபதஹதைன், கஸரதைன், ளம்மதைன்) இவையே தன்வின் எனப்படும்.
உதாரணம்: ثًا ، دٍ ، نٌ ، يٍ ، شاً ، بٌ
(எப்போதும் ஒரு எழுத்து ً பெற்று வரும்போது அதனுடன் ஒரு ا துணையாக வரும்.
அதாவது, وًا ، كًا ، لًا ، جًا ، صًا
தன்வினுக்கும் நூனே சாகினுக்கும் உள்ள ஒற்றுமை:
தன்வின் ‘ன்’ என்ற சப்தத்தைக் குறிக்கும்.
قًا - க'ன்'
ثٍ – ஸி'ன்'
عٌ – உ'ன்'
நூனே சாகின்:
நூனே சாகினும் தன்வினை போல ‘ன்’ சப்தத்தைக் கொண்டு முடியும்.
اَنْ – அ'ன்'
خِنْ – க்ஹி'ன்'
ظُنْ- லு'ன்'
இதன் மூலம் நூனே சாகினும் தன்வினும் உருவத்தால் வேறுபட்டிருந்தாலும் உச்சரிப்பில் ஒரே மாதிரியாக உள்ளது என்பதை அறியலாம்.
மேலும் சில உதாரணங்கள்:
بًا = بَنْ - பன்
تٍ = تِنْ - தின்
لٌ = لُنْ – லுன்
مٌ = مُنْ - முன்
فٍ = فِنْ - ஃபின்
رًا = رَنْ – ரன்
தஜ்வீத் - சாகின், தன்வின் |
1 Comments
Masha allah😍👍
ReplyDelete