தஜ்வீத் - மீமே சாகின்

 மீமே சாகின்:


சுகூன் பெற்ற மீமை மீமே சாகின் என்பர்.


மீமே சாகின் சட்டங்கள் மூன்று வகைப்படும்.


1. இத்ஙாம் ஷஃபவீ

2. இக்ஃபா ஷஃபவீ

3. இழ்ஹார் ஷஃபவீ


இத்ஙாம் ஷஃபவீ:


இத்ஙாம் என்றால் இணைத்தல் என்று பொருள்.


மீமே சாகின் இத்ஙாம் உடைய எழுத்து م


ஒரு வார்த்தையின் இடையிலோ, இறுதியிலோ சுகூன் பெற்ற م க்கு அடுத்த எழுத்தும் م ஆக வந்தால் , அந்த இரண்டு م ஐயும் ஒன்றாக இணைத்து குன்னா செய்து ஓத வேண்டும்.


உதாரணம்:


اِلَيْكُمْ مُّرْسَلُوْنَ - இலைக்கும்(ம்) முர்சலூன்

اَطْعَمَهُمْ مِّنْ - அத்அமஹும்(ம்) மின்


மேற்கண்ட உதாரணங்களில் சுகூன் பெற்ற م ஐ அடுத்து இத்ஙாம் எழுத்தான م வந்துள்ளதால் இந்த இரண்டு மீமையும் ஒன்றாக இணைத்து குன்னா செய்து ஓத வேண்டும்.


இக்ஃபா ஷஃபவீ:


இக்ஃபா என்றால் மறைத்தல் என்று பொருள்.


மீமே சாகின் இக்ஃபா உடைய எழுத்து ب


ஒரு வார்த்தையின் இடையிலோ, இறுதியிலோ சுகூன் பெற்ற م க்கு அடுத்த எழுத்து ب ஆக வந்தால் , அந்த مபாதியாக மறைத்து குன்னா செய்து ஓத வேண்டும்.


உதாரணம்:


تَرْمِيْهِمْ بِحِجَارَةٍ - தர்மீஹிம் பிஹிஜாரதின்

رَبَّهُمْ بِهِمْரப்பஹும் பிஹிம்


மேற்கண்ட உதாரணங்களில் சுகூன் பெற்ற م ஐ அடுத்து இக்ஃபா எழுத்தான ب வந்துள்ளதால் இந்த மீமை பாதியாக மறைத்து குன்னா செய்து ஓத வேண்டும்.


இழ்ஹார் ஷஃபவீ:


இழ்ஹார் என்றால் வெளிப்படுத்துதல் என்று பொருள்.


ب م ஐ தவிர மற்ற அனைத்தும் மீமே சாகினுடைய இழ்ஹார் எழுத்துக்கள்.


ஒரு வார்த்தையின் இடையிலோ, இறுதியிலோ சுகூன் பெற்றم க்கு அடுத்து ب م ஐ தவிர வேறு எந்த எழுத்து வந்தாலும் அதனை குன்னா செய்யாமல் வெளிப்படுத்தி ஓத வேண்டும்.


உதாரணம்:


اَلَمْ تَرَ - அலம் தர

لَكُمْ دِيْنُكُمْ - லகும் தீனுகும்


மேற்கண்ட உதாரணங்களில் சுகூன் பெற்ற م ஐ அடுத்து இழ்ஹார் உடைய எழுத்துக்கள வந்துள்ளதால் இந்த மீமை வெளிப்படுத்தி  குன்னா செய்யாமல் ஓத வேண்டும்.


தஜ்வீத் - மீமே சாகின்
தஜ்வீத் - மீமே சாகின்



பயிற்சி:


குர்ஆனில் இருந்து மீமே சாகின் இத்ஙாம் ஷஃபவீ சட்டம் பொருந்தும் படியான 5 உதாரணங்களைக் குறிப்பிடவும்.


Post a Comment

0 Comments