தஜ்வீத் - ஷம்ஸிய்யா கமரிய்யா எழுத்துக்கள்

 ஷம்ஸிய்யா கமரிய்யா எழுத்துக்கள்


ஷம்ஸிய்யா என்றால் சூரியன் என்றும் கமரிய்யா என்றால் சந்திரன் என்றும் பொருள்.


ஷம்ஸிய்யா எழுத்துக்கள்:


இதனை சூரிய எழுத்துக்கள் என்றும் சொல்லலாம்.


சூரிய எழுத்துக்கள் மொத்தம் பதினான்கு.


அவை: ت ث د ذ ر ز س ش ص ض ط ظ ل ن


பொதுவாக ال க்கு பின் இந்த ஷம்ஸிய்யா எழுத்துக்களில் ஏதேனும் ஒன்று வந்தால் ال க்கு எந்த உச்சரிப்பும் கொடுக்காமல் ال க்கு முன்னுள்ள எழுத்துடன் ஷம்ஸிய்யா எழுத்தை இத்ஙாம் செய்து ஓத வேண்டும்.


உதாரணம்:


 وَالطُّوْرٍ - வத்தூரி

آمَنَ الرَّسُوْلُஆமனர் ரஸூலுல்லாஹ்


கமரிய்யா எழுத்துக்கள்:


இதனை சந்திர எழுத்துக்கள் என்றும் சொல்லலாம்.


சந்திர எழுத்துக்கள் மொத்தம் பதினான்கு.


அவை: ب ج ح خ ع غ ف ق ك م و ه ء ي


பொதுவாக ال க்கு பின் இந்த கமரிய்யா எழுத்துக்களில் ஏதேனும் ஒன்று வந்தால் ال ஐ இழ்ஹார் செய்து (வெளிப்படுத்தி) உச்சரிப்பு கொடுத்து ஓத வேண்டும்.


உதாரணம்:


الْفُرْكَانَ - அல்ஃபுர்கான்

وَالقَمَرِ - வல்கமரி



பயிற்சி:

குர்ஆனில் இருந்து 5 ஷம்ஸியா உதாரணங்களும் 5 கமரிய்யா உதாரணங்களும் கண்டறியவும்.

Post a Comment

0 Comments