தஜ்வீத் - குன்னா விளக்கம்

 குன்னா சட்டம்


குன்னா என்றால் மூக்கில் மறைத்து ஓதுதல் என்று பொருள்.


அதாவது தமிழில் ங என்ற எழுத்தை நாம் வாய் வழியாக நேரடியாக உச்சரிக்காமல் சிறிது மூக்கில் மறைத்து உச்சரிப்போம்.

 

இவ்வாறு அரபியில் சில இடங்களில் மூக்கில் மறைத்து ஓத வேண்டும். அதுவே குன்னா ஆகும்.


குன்னா செய்ய வேண்டிய இடங்கள்:


பொதுவாக குர்ஆனில் எங்கு ن  மற்றும் م   ஷத்து (   ّ  ) பெற்ற நிலையில் வந்தாலும் அதனை சாதாரணமாக ஓதாமல் மூக்கில் மறைத்து ஒரு ஹரகத் அளவு நீட்டி ஓத வேண்டும்.


அதாவது اِنَّ  இதில் ஷத்தா பெற்ற நூன் இருப்பதால் இதனை இன்ன என்று சாதாரணமாக ஓதாமல் இ(ங்)ன்ன என்ற உச்சரிப்பு கொடுத்து ஓத வேண்டும்.


அதேபோல் مِمَّ  இதில் ஷத்தா பெற்ற م  இருப்பதால் இதனை மிம்ம என்று சாதாரணமாக ஓதாமல் மிம்ம்ம என்று ஓத  வேண்டும்.


தஜ்வீத் - குன்னா எழுத்துக்கள்


குறிப்பு:

  • م  ஐ பொறுத்த வரையில் ங சத்தம் வராது, ஆனால் அந்த ம் என்ற சப்தத்தை மூக்கில் மறைத்து அழுத்தம் கொடுத்து ஓத வேண்டும்.
  • இவ்வாறு குன்னா செய்யும் இடங்களை விரைவாக ஓதாமல் அழுத்தம் கொடுத்து நிதானமாக ஓத வேண்டும்.
  • கீழ்க்கண்ட வார்த்தைகளில் உள்ள குன்னாவின் சட்டங்களைக் கண்டறிக. 

குன்னா



Post a Comment

0 Comments