தஜ்வீத் - நூனே சாகின் , தன்வின் - இழ்ஹார் , இக்ஃபா

நூனே சாகின் மற்றும் தன்வின் சட்டம்:

நூனே சாகினும் தன்வினும் ஒரே மாதிரியான உச்சரிப்பைப் பெற்றுள்ளதால் அவை இரண்டிற்கும் கீழ்க்கண்ட சட்டங்கள் பொருந்தும்.

1. இழ்ஹார்

2. இக்ஃபா

3. இத்ஙாம்

4. இக்லாப்


இழ்ஹார்:

இழ்ஹார் என்றால் வெளிப்படுத்துதல் என்று பொருள்.


இழ்ஹார் உடைய எழுத்துக்கள் மொத்தம் ஆறு


அவை : ء ، ه ، ع ، ح ، غ ، خ

(தொண்டை எழுத்துக்கள்)


ஒரு வார்த்தையின் நடுவிலோ அல்லது கடைசியில் நூனே சாகின் மற்றும் தன்வினுக்கு அடுத்து இந்த இழ்ஹார் உடைய எழுத்துக்கள் ஏதேனும் வந்தால், நூனே சாகின்/தன்வினுக்கரிய ‘ன்’ சப்தத்தை சற்றும் மறைக்காமல் தெளிவாக வெளிப்படுத்தி ஓத வேண்டும்.


அதாவது, مِنْ اَخِيْه  இதில் மின் என்று நூனே சாகின் வந்துள்ளது. 


இந்த நூனே சாகினை அடுத்து இழ்ஹார் உடைய எழுத்துக்களில் ஒன்றான ا(ء)  வந்துள்ளதால் இந்த ‘ன்’ உச்சரிப்பை சிறிதும் மாற்றாமல் அப்படியே மின் அக்ஹீஹ் என்று ஓத வேண்டும்.


طَيْرًا اَبَابِيْلَ  இதில் தொய்ர’ன்’ என்று தன்வின் வந்துள்ளது. 

இந்த தன்வினை அடுத்து இழ்ஹார் உடைய எழுத்துக்களில் ஒன்றான ا(ء)  வந்துள்ளதால் இந்த ‘ன்’ உச்சரிப்பை சிறிதும் மாற்றாமல் அப்படியே தொய்ரன் அபாபீல் என்று ஓத வேண்டும்.


மேலும் சில உதாரணங்கள்:

لِمَنْ خَشِىَ

ناَرٌ حاَمِيَةٌ

حُرُفٍ هَارٍ

اِنْ هُوَ


இக்ஃபா:


இக்ஃபா என்றால் மறைத்தல் என்று பொருள்.


இக்ஃபா உடைய எழுத்துக்கள் பதினைந்து.


அவை: ت ث ج د ذ ز س ش ص ض ط ظ ف ق ك 


ஒரு வார்த்தையின் நடுவிலோ அல்லது கடைசியிலோ நூனே சாகின் மற்றும் தன்வினுக்கு அடுத்து இந்த இக்ஃபா உடைய எழுத்துக்கள் ஏதேனும் வந்தால், நூனே சாகின்/தன்வினுக்கரிய ‘ன்’ சப்தத்தை சற்றும் வெளிக்காட்டாமல் மூக்கில் மறைத்து குன்னா செய்து ஓத வேண்டும்.


குன்னா என்றால் என்ன?


அதாவது, مِنْ ثَمَرَةٍ  இதில் மின் என்று நூனே சாகின் வந்துள்ளது. 


இந்த நூனே சாகினை அடுத்து இக்ஃபா உடைய எழுத்துக்களில் ஒன்றான ث வந்துள்ளதால் இந்த ‘ன்’ உச்சரிப்பை சிறிதும் வெளிக்காட்டாமல் மூக்கில் மறைத்து மி’ங்’ ஸமரதின் என்று ஓத வேண்டும்.


اَنْتَ مُنْذِرُ    இதில் அ’ன்’(த)  என்று நூனே சாகினை அடுத்து ت  என்ற இக்ஃபா எழுத்தும், மு’ன்’(தி)ரு என்ற வார்த்தையில் நூனே சாகினுக்கு அடுத்து இக்ஃபா எழுத்தான ذ  வந்துள்ளதால் இதனை மூக்கில் மறைத்து வந்துள்ளதால் ‘ன்’ சப்தத்தை மறைத்து அங்த மூக்கில் மறைத்து குன்னா செய்து அங்த முங்திரு என்று ஓத வேண்டும்.


كِرَاماً كَاتِبِيْنَ  இதில் மன் என்ற தன்வின் வந்துள்ளது.

இந்த தன்வினை அடுத்து இக்ஃபா உடைய எழுத்துக்களில் ஒன்றான ك வந்துள்ளதால் இந்த ‘ன்’ உச்சரிப்பை மறைத்து குன்னா செய்து கிராமங் காதிபீன் என்று ஓத வேண்டும்.


மேலும் சில உதாரணங்கள்:

يَنْظُرُوْنَ

خَالِدًا فِيْهاَ

قَوْمٌ تَجْهَلُوْنَ


நூனே சாகின் தன்வின் - இழ்ஹார் & இக்ஃபா
நூனே சாகின் தன்வின் - இழ்ஹார் & இக்ஃபா



பயிற்சி:

குர்ஆனில் 5 இழ்ஹார் வார்த்தைகளையும் 5 இக்ஃபா வார்த்தைகளையும் கண்டறிக.

وَمِن شَرِّ غَاسِقٍ  وَقَبَ

இந்த வசனத்தில் உள்ள இழ்ஹார் மற்றும் இக்ஃபா சட்டத்தைக் கண்டறிக.



Post a Comment

1 Comments