லீன் சட்டம்:
லீன் என்றால் லேசானது என்று பொருள்.
லீன் எழுத்துக்கள் மொத்தம் இரண்டு.
அவை و ، ي
இந்த இரண்டு எழுத்துக்களும் சுகூன் பெற்று வந்து அதற்கு முன் உள்ள எழுத்து ஃபத்ஹா பெற்று வந்தால் அதனை (லீன் எழுத்தை) அதனை லேசாகவும் விரைவாகவும் ஓத வேண்டும்.
உதாரணம்: بَيْتِ ، كَوْثَرْ
நூன் குத்னி:
ஒரு வார்த்தையின் இறுதியில் தன்வின் வந்து அதற்கு அடுத்த வார்த்தையின் ஆரம்பத்தில் அலிஃப் வந்தால், அந்த தன்வினை ஹரகத் ஆக மாற்றி ஒரு கஸ்ரா பெற்ற நூனையும் சேர்த்து ஓத வேண்டும்.
உதாரணம்:
لُمَزَةٍ الَّذِىْ – لُمَزَةِ نِ الَّذِىْ
نُوْحٌ اِبْنَهُ – نُوْحُ نِ اِبْنَهُ
மேற்கண்ட உதாரணங்களை உற்று கவனித்தால், தன்வினை ஹரகத்தாக மாற்றி ஒரு கஸ்ரா பெற்ற நூனை உடன் சேர்த்திருப்பது தெரியும்.
குறிப்பு:
குர்ஆனில் அலிஃப் க்கு கீழ் சிறிய அளவில் நூன் வரும், அதைக்கொண்டு எளிதாக நூன் குத்னியை அறியலாம்.
லீன் எழுத்துக்கள் |
பயிற்சி:
குர்ஆனில் இருந்து லீன் சட்டங்களுக்காக 5 உதாரணங்களையும், நூன் குத்னிக்கான 5 உதாரணங்களையும் கண்டறியவும்.
0 Comments