ஓதப்படாத எழுத்துக்கள் - தஜ்வீத் அல் குர்ஆன்

 ஓதப்படாத எழுத்துக்கள்:


1. ஒரு எழுத்து ஷத்தா பெற்று அதற்கு முன்னுள்ள எழுத்து / எழுத்துக்கள் ஹரகத் பெறாமல் வந்தால் அந்த ஹரகத் அற்ற எழுத்தை ஓதாமல் விட்டு விட வேண்டும்.


உதாரணம்: كَالدِّ ، فِى السَّ


2. ஒரு எழுத்து ஷத்தா பெற்று அதற்கு முன்னுள்ள எழுத்து சுகூன் பெற்று வந்தால் அந்த சுகூன் பெற்ற எழுத்தை ஓதாமல் விட்டு விட வேண்டும்.


உதாரணம்: وَجَدْتُّمْ - وَجَتُّمْ ، قُلْرَّبِّ - قُرَّبِّ


3. இரண்டு வார்த்தைகளுக்கு இடையே வரும் ஹரகத் அற்ற அலிஃப் ஐ ஓதாமல் விட்டு விட வேண்டும்.


உதாரணம்: وَاِذَ ا الْجِبَالِ


4. சில வார்த்தைகளின் இடையிலோ இறுதியிலோ ஹரகத் அற்ற ا و ى ஆகியன வந்தால் அவற்றை ஓதாமல் விட்டு விட வேண்டும்.


உதாரணம்: وَاالَّلهِ ، ذُو الْفَضْلِ عَلَى الْهُدَا


5. சில வார்த்தைகளின் ஆரம்பத்திலோ இடையிலோ ஹரகத் அற்றال வந்தால் அதனை ஓதாமல் விட்டு விட வேண்டும்.


உதாரணம்: اِهْدِنَا الصِّرَاط 


6. குர்ஆனில் اَنَا என்று எங்கு வந்தாலும் இறுதியில் உள்ள அலிஃப் மேல்  ْகுறியீடு இருந்தால் அந்த அலிஃபை ஓதாமல் اَنَ என்று ஓத வேண்டும்.


ஓதப்படாத எழுத்துக்கள்
ஓதப்படாத எழுத்துக்கள் உதாரணம்


Post a Comment

0 Comments