வக்ஃப் சட்டங்கள்:
ஒரு வசனம் முடியும் போது ○ வட்டம் போல் இருக்கும் இந்த குறியீட்டை வக்ஃப் என்போம்.
வக்ஃப் செய்து நிறுத்தும்போது, அதற்கு முன் உள்ள எழுத்தைக் கொண்டே எவ்வாறு நிறுத்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.
1. வக்ஃப் க்கு முன்னுள்ள உள்ள எழுத்து ஃபத்ஹா ( َ ), கஸ்ரா ( ِ ), ளம்மா ( ُ ), கஸரதைன்( ٍ ), ளம்மதைன்( ٌ ), நிற்கும் கஸ்ரா நிற்கும் ளம்மா ஆகியன பெற்று வந்தால் அந்த எழுத்தின் ஹரகத்தை சுகூன் ( ْ ) ஆக மாற்றி வக்ஃப் செய்து நிறுத்த வேண்டும்.
உதாரணம்:
اَبَابِيْلَ ○ – اَبَابِيْلْ
الْفِيْلِ ○ – الْفِيْلْ
خَوْفٍ ○ – خَوْفْ
2. வக்ஃப் க்கு முன்னுள்ள உள்ள எழுத்து நிற்கும் ஃபத்ஹா ( َ ), சுகூன் ( ْ ) ஆகியன பெற்று வந்தால் அதனை எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே உச்சரிக்க வேண்டும்.
உதாரணம்:
○ عَبَدْتُّمْ
○الذِّكْرَىٰ
3. வக்ஃப் க்கு முன்னுள்ள உள்ள எழுத்து ஃபதஹதைன் ( ً) பெற்று வந்தால் அதனை அலிஃப் மத்தாவாக மாற்றி உச்சரிக்க வேண்டும்.
உதாரணம்:
سَبَبًا ○ – سَبَبَا
تَوَّابًا ○ – تَوّابَا
4. வக்ஃப் க்கு முன்னுள்ள உள்ள எழுத்து தாவுல் மர்பூதா ( ة ) பெற்று வந்தால் அதனை ه வாக மாற்றி சுகூன் கொடுத்து உச்சரிக்க வேண்டும்.
உதாரணம்:
لُمَزَهْ - ○ لُّمَزَةٍ
வக்ஃப் சட்டங்கள் |
குர்ஆனில் வசனங்களுக்கு இடையில் சிறிய அளவில் م ج போன்ற குறியீடுகள் வரும். அவ்வாறு வந்தால் எப்படி ஓத வேண்டும் என்பதை இந்த அட்டவணையில் பார்ப்போம்.
நிறுத்தல் குறியீடுகள் |
பயிற்சி:
குர்ஆனில் இருந்து அனைத்து வகையான நிறுத்தம சட்டங்களுக்கு 2 உதாரணங்களைக் கண்டறிக.
0 Comments