حروف الهمس
ஹுருஃபுல் ஹம்ஸ் என்றால் காற்றை வெளிப்படுத்தி உச்சரிக்கப்படும் எழுத்துக்கள் என்று பொருள்.
ஹம்ஸ் உடைய எழுத்துக்கள் பத்து.
அவை: ت ث ح خ س ش ص ف ك ه
இதனை فَخْثَهُ شَخْصً سَكَتْ என்று நினைவில் வைத்துக் கொள்ளலாம்.
அதாவது, ஒரு வார்த்தையின் நடுவிலோ இறுதியிலோ இந்த ஹம்ஸுடைய எழுத்துக்களில் ஏதேனும் ஒன்று வந்தால் அதைக் காற்றுடன் உச்சரிக்க வேண்டும்.
ஹம்ஸ் இரண்டு வகைப்படும்.
1. الهمس صغير
2. الهمس كبير
ஹம்ஸு சகீர் என்றால் காற்றை குறைவாக வெளிப்படுத்துதல் என்று பொருள்.
ஒரு வார்த்தையின் நடுவில் ஹம்ஸுடைய 10 எழுத்துக்களில் ஏதேனும் ஒன்று சுகுன் பெற்று வருமானால் அந்த எழுத்தை குறைந்த காற்றை வெளிப்படுத்தி உச்சரிக்க வேண்டும்.
உதாரணம்: اَيَحْسَبُ, اَفْتَحُ، اَكْرَمَن
ஒரு வார்த்தையின் இறுதியில் ஹம்ஸுடைய 10 எழுத்துக்களில் ஏதேனும் ஒன்று ஃபதஹதைனைத் ( ً ) தவிர பெற்று வருமானால் அந்த எழுத்தை அதிகமான காற்றை வெளிப்படுத்தி உச்சரிக்க வேண்டும்.
உதாரணம்: مِنْ جُوْفٍ، فَحَدِّثْ
பயிற்சி:
குர்ஆனில் இருந்து ஹம்ஸ் சுக்ரா மற்றும் ஹம்ஸ் குப்ராவிற்கு ஐந்து ஐந்து உதாரணங்களைக் கண்டறிந்து எழுதவும்.
0 Comments