அகீதா - அல்லாஹ்வை நம்புதல் - தவ்ஹீத் அர் ருபூபிய்யா

بسم الله الرحمان الرحيم 


முந்தைய பதிவின் லிங்க்...


1. அல்லாஹ்வை நம்புதல்:

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே என்று உளப்பூர்வமாக நம்புவது. அல்லாஹ்வின் தன்மைகள் வேறு யாருக்கும் இல்லை, அவனுக்கு பலவீனங்கள் இல்லை, அவனுக்கு நிகராக எதுவுமில்லை, அவன் கட்டளையின் படியே தவிர வேறெதுவும் நிகழ்வதில்லை என்று நம்பிக்கை கொள்வது.


சூரா அல் அன்பியா வசனம் 30

أَوَلَمْ يَرَ الَّذِينَ كَفَرُوا أَنَّ السَّمَاوَاتِ وَالْأَرْضَ كَانَتَا رَتْقًا فَفَتَقْنَاهُمَا ۖ وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ ۖ أَفَلَا يُؤْمِنُونَ

நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா?

பெரு வெடிப்புக் கோட்பாடு


சூரா அல் யூனுஸ் வசனம் 6

إِنَّ فِي اخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ وَمَا خَلَقَ اللَّهُ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ لَآيَاتٍ لِّقَوْمٍ يَتَّقُونَ

இரவு, பகல் மாறி மாறி வருவதிலும், வானங்களையும், பூமியையும் அல்லாஹ் படைத்திருப்பதிலும் (இறைவனை) அஞ்சுகின்ற சமுதாயத்திற்குச் சான்றுகள் உள்ளன.


தவ்ஹீத் என்றால் என்ன?

தவ்ஹீத் என்பதற்கு ஒருமைப்படுத்துதல்  என்று பொருள்.

அல்லாஹ்விற்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை மட்டுமே வணங்கி அவனிடம் மட்டுமே உதவி தேடி அவனை மட்டுமே சார்ந்திருப்பதே தவ்ஹீத் என்று சொல்லப்படும்.


தவ்ஹீதின் வகைகள்:

1. தவ்ஹீத் அர் ருபூபியா 

2. தவ்ஹீத் அல் உலூஹிய்யா 

3. தவ்ஹீத் அல் அஸ்மாவு வஸ்ஸிஃபாத் 


தவ்ஹீத் அர் ருபூபியா


தவ்ஹீத் அர் ருபூபியா :

படைத்தல், அழித்தல், ஆட்சி, அதிகாரம், குழந்தையைக் கொடுத்தல், நன்மை, தீமை, போன்றவை அல்லாஹ்வால் மட்டுமே இயலும் என நம்புவதும், மறைவான ஞானம் அல்லாஹ்வை தவிர வேறு யாருக்கும் இல்லை என உளப்பூர்வமாக நம்பிக்கைக் கொள்வது.


1. படைத்தல்:

சூரா அல் அஃராஃப் வசனம் 54

أَلَا لَهُ الْخَلْقُ وَالْأَمْرُ ۗ 

 கவனத்தில் கொள்க! படைத்தலும், கட்டளையும் அவனுக்கே உரியன. 

சூரா அத்தூர் வசனம் 35

أَمْ خُلِقُوا مِنْ غَيْرِ شَيْءٍ أَمْ هُمُ الْخَالِقُونَ

எப்பொருளும் இன்றி அவர்கள் படைக்கப்பட்டார்களா? அல்லது அவர்களே படைப்பவர்களா?

வானங்கள் மற்றும் பூமியை படைத்தான்:


சூரா அத்தூர் வசனம் 36

أَمْ خَلَقُوا السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۚ  

அல்லது வானங்களையும், பூமியையும் அவர்களே படைத்தார்களா?  


  • சூரியன், சந்திரன், பகல், இரவு ஆகியவற்றை  அல்லாஹ்வே படைத்தான்:

சூரா அல் அன்பியா வசனம் 33

وَهُوَ الَّذِي خَلَقَ اللَّيْلَ وَالنَّهَارَ وَالشَّمْسَ وَالْقَمَرَ ۖ كُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَ

அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் படைத்தான். ஒவ்வொன்றும் வான்வெளியில் நீந்துகின்றன.


  • அனைத்து உயிரினங்களையும் அவனே படைத்தான்:

சூரா அந்நூர் வசனம் 45

وَاللَّهُ خَلَقَ كُلَّ دَابَّةٍ مِّن مَّاءٍ ۖ فَمِنْهُم مَّن يَمْشِي عَلَىٰ بَطْنِهِ وَمِنْهُم مَّن يَمْشِي عَلَىٰ رِجْلَيْنِ وَمِنْهُم مَّن يَمْشِي عَلَىٰ أَرْبَعٍ ۚ يَخْلُقُ اللَّهُ مَا يَشَاءُ ۚ إِنَّ اللَّهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

ஒவ்வொரு உயிரினத்தையும் அல்லாஹ் நீரால் படைத்தான். அவற்றில் வயிற்றால் நடப்பவை உள்ளன. இரு கால்களால் நடப்பவையும் அவற்றில் உள்ளன. நான்கு கால்களால் நடப்பவையும் அவற்றில் உள்ளன. தான் நாடியதை அல்லாஹ் படைப்பான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.

  • ஜோடிகளாக படைத்தான்:

சூரா அல் யாஸின் வசனம் 36

سُبْحَانَ الَّذِي خَلَقَ الْأَزْوَاجَ كُلَّهَا مِمَّا تُنبِتُ الْأَرْضُ وَمِنْ أَنفُسِهِمْ وَمِمَّا لَا يَعْلَمُونَ

பூமி முளைக்கச் செய்வதிலிருந்தும், அவர்களிலிருந்தும், அவர்கள் அறியாதவற்றிலிருந்தும் ஜோடிகள் அனைத்தையும் உருவாக்கியவன் தூயவன்.


  • மனித படைப்பு:

சூரா அல்ஹஜ் வசனம் 5

يَا أَيُّهَا النَّاسُ إِن كُنتُمْ فِي رَيْبٍ مِّنَ الْبَعْثِ فَإِنَّا خَلَقْنَاكُم مِّن تُرَابٍ ثُمَّ مِن نُّطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ مِن مُّضْغَةٍ مُّخَلَّقَةٍ وَغَيْرِ مُخَلَّقَةٍ لِّنُبَيِّنَ لَكُمْ ۚ وَنُقِرُّ فِي الْأَرْحَامِ مَا نَشَاءُ إِلَىٰ أَجَلٍ مُّسَمًّى ثُمَّ نُخْرِجُكُمْ طِفْلًا ثُمَّ لِتَبْلُغُوا أَشُدَّكُمْ ۖ وَمِنكُم مَّن يُتَوَفَّىٰ وَمِنكُم مَّن يُرَدُّ إِلَىٰ أَرْذَلِ الْعُمُرِ لِكَيْلَا يَعْلَمَ مِن بَعْدِ عِلْمٍ شَيْئًا ۚ وَتَرَى الْأَرْضَ هَامِدَةً فَإِذَا أَنزَلْنَا عَلَيْهَا الْمَاءَ اهْتَزَّتْ وَرَبَتْ وَأَنبَتَتْ مِن كُلِّ زَوْجٍ بَهِيجٍ

மனிதர்களே! மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் (உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறோம்.) உங்களை மண்ணாலும், பின்னர் விந்துத் துளியாலும், பின்னர் கருவுற்ற சினைமுட்டையாலும், பின்னர் முழுமைப்படுத்தப்பட்டதும் முழுமைப்படுத்தப்படாததுமான தசைக்கட்டியாலும் படைத்தோம். நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலைபெறச் செய்கிறோம். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்னர் நீங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். உங்களில் கைப்பற்றப்படுவோரும் உள்ளனர். அறிந்த பின் எதையும் அறியாமல் போவதற்காக தள்ளாத வயது வரை கொண்டு செல்லப்படுவோரும் உங்களில் உள்ளனர். பூமியை வறண்டதாகக் காண்கிறீர். அதன் மீது நாம் தண்ணீரை இறக்கும்போது, அது செழித்து வளர்ந்து அழகான ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்கிறது.

இதன் தொடர்ச்சி...


Post a Comment

0 Comments