بسم الله الرحمان الرحيم
தவ்ஹீத் அல் அஸ்மாவு அஸ்ஸிஃபாத் |
தவ்ஹீத் அல்அஸ்மாவு வஸிஃபாத்
அல்லாஹ்விற்கு அழகிய பெயர்கள் உண்டு, யாருக்கும் அல்லாத பண்புகள் அவனுக்கு உண்டு என்று நம்புவது.
சூரா அல் அஃராப் வசனம் 180
وَلِلَّهِ الْأَسْمَاءُ الْحُسْنَىٰ فَادْعُوهُ بِهَا ۖ
அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்!
சூரா அல் தாஹா வசனம் 8
اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ ۖ لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَىٰ
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன.
ஹதீஸ் ஆதாரம்:
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
அல்லாஹ்விற்கு தொண்ணூற்று ஒன்பது நூற்றுக்கு ஒன்று குறைவான – பெயர்கள் உண்டு. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் யாரும் சொர்க்கம் நுழையாமல் இருப்பதில்லை. அல்லாஹ் ஒற்றையானவன். ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புகாரி 6410
இறைவனின் இலக்கணம்:
திருமறைக் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியான சூரத்துல் இஃக்லாஸ் – ஏகத்துவம் இறைவனின் இலக்கணத்தை தெளிவாக உணர்த்துவதாக இருக்கிறது.
بسم الله الرحمان الرحيم
قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌ ۚ
(நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
اَللّٰهُ الصَّمَدُ ۚ
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
لَمْ يَلِدْ ۙ وَلَمْ يُوْلَدْ ۙ
அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
وَلَمْ يَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
- இறைவன் ஒருவனே:
وَإِلَٰهُكُمْ إِلَٰهٌ وَاحِدٌ ۖ لَّا إِلَٰهَ إِلَّا هُوَ الرَّحْمَٰنُ الرَّحِيمُ
உங்கள் வணக்கத்திற்குரியவன் ஒரே ஒரு இறைவனே. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. (அவன்) அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன்.
- அல்லாஹ் தேவைகள் அற்றவன்:
وَاعْلَمُوا أَنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ
அல்லாஹ் தேவைகளற்றவன்; புகழுக்குரியவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
- அல்லாஹ்விற்கு மனைவி, மகன் இல்லை:
وَأَنَّهُ تَعَالَىٰ جَدُّ رَبِّنَا مَا اتَّخَذَ صَاحِبَةً وَلَا وَلَدًا
எங்கள் இறைவனின் மகத்துவம் உயர்ந்தது. அவன் மனைவியையோ, பிள்ளைகளையோ ஏற்படுத்திடவில்லை.
சூரா அல்அன்ஆம் வசனம் 101
بَدِيعُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۖ أَنَّىٰ يَكُونُ لَهُ وَلَدٌ وَلَمْ تَكُن لَّهُ صَاحِبَةٌ ۖ وَخَلَقَ كُلَّ شَيْءٍ ۖ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ
(அவன்) வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவன். அவனுக்கு மனைவி இல்லாத நிலையில் அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். அவன் அனைத்துப் பொருட்களையும் அறிந்தவன்.
சூரா அந்நஹ்ல் வசனம் 57
وَيَجْعَلُونَ لِلَّهِ الْبَنَاتِ سُبْحَانَهُ ۙ وَلَهُم مَّا يَشْتَهُونَ
அல்லாஹ்வுக்குப் புதல்வியரைக் கற்பனை செய்கின்றனர். அவன் தூயவன். அவர்களுக்கோ அவர்கள் ஆசைப்படுவது (ஆண் குழந்தை) வேண்டுமாம்!
- அவனுக்கு நிகராக எதுவுமில்லை:
الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ فِرَاشًا وَالسَّمَاءَ بِنَاءً وَأَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَّكُمْ ۖ فَلَا تَجْعَلُوا لِلَّهِ أَندَادًا وَأَنتُمْ تَعْلَمُونَ
அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாகவும், வானத்தை முகடாகவும் அமைத்தான். வானிலிருந்து தண்ணீரையும் இறக்கினான். அதன் மூலம் கனிகளை உங்களுக்கு உணவாக (பூமியிலிருந்து) வெளிப்படுத்தினான். எனவே அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு நிகராக எவரையும் கற்பனை செய்யாதீர்கள்!
0 Comments