بسم الله الرحمان الرحيم
அகீதா - மறுமையில் இறைவனை பார்க்க முடியுமா? |
மறுமையில் இறைவனை பார்க்க முடியுமா?
சூரா அர் ரஃது வசனம் 2
(இவ்வேதத்தை அருளிய) அல்லாஹ் எத்தகையவனென்றால் அவன் வானங்களைத் தூணின்றியே உயர்த்தியுள்ளான்; நீங்கள் அவற்றைப் பார்க்கிறீர்கள்; பின்னர் அவன் அர்ஷின்மீது அமைந்தான்; இன்னும் அவனே சூரியனையும் சந்திரனையும் (தன்) அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; (இவை) அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன; அவனே (எல்லாக்) காரியத்தையும் நிர்வகிக்கின்றான் - நீங்கள் உங்கள் இறைவனைச் சந்திப்பதை உறுதி கொள்ளும் பொருட்டு, அவன் (இவ்வாறு தன்) வசனங்களை விளக்குகின்றான்.
சூரா அல் அன்கபூத் வசனம் 23
وَالَّذِينَ كَفَرُوا بِآيَاتِ اللَّهِ وَلِقَائِهِ أُولَٰئِكَ يَئِسُوا مِن رَّحْمَتِي وَأُولَٰئِكَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ
அல்லாஹ்வின் வசனங்களையும், அவனது சந்திப்பையும் மறுப்போர் (அல்லாஹ்வாகிய) எனது அருளில் நம்பிக்கையிழந்து விட்டனர். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.
சூரா அல் கியாமா வசனங்கள் 22,23
وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاضِرَةٌ
அந்நாளில் சில முகங்கள் மலர்ந்து இருக்கும்.
إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٌ
தமது இறைவனைப் பார்த்துக் கொண்டிருக்கும்.
இறை மறுப்பாளர்கள் மறுமையில் அல்லாஹ்வை பார்ப்பார்களா?
சூரா அல் யூனுஸ் வசனம் 45
وَيَوْمَ يَحْشُرُهُمْ كَأَن لَّمْ يَلْبَثُوا إِلَّا سَاعَةً مِّنَ النَّهَارِ يَتَعَارَفُونَ بَيْنَهُمْ ۚ قَدْ خَسِرَ الَّذِينَ كَذَّبُوا بِلِقَاءِ اللَّهِ وَمَا كَانُوا مُهْتَدِينَ
அவர்களை அவன் எழுப்பும் நாளில் பகலில் சிறிது நேரமே (பூமியில்) வசித்தது போல் ஒருவரையொருவர் அறிந்து கொள்வார்கள். அல்லாஹ்வின் சந்திப்பைப் பொய்யெனக் கருதியோர் நட்டமடைந்து விட்டனர். அவர்கள் நேர்வழி பெறவில்லை.
சூரா அல் முதஃப்பிபீன் வசனம் 15
كَلَّا إِنَّهُمْ عَن رَّبِّهِمْ يَوْمَئِذٍ لَّمَحْجُوبُونَ
அவ்வாறில்லை! அந்நாளில் அவர்கள் தமது இறைவனை விட்டும் தடுக்கப்படுவார்கள்.
0 Comments