أحكام همزة ஹம்ஜாவின் சட்டம்
ஹம்ஜா இரண்டு வகைப்படும்.
1. همزة القطع ஹம்ஜத்துல் கதஃ
2. همزة الوصل ஹம்ஜத்துல் வஸ்ல்
ஹம்ஜத்துல் கதஃ:
ஹம்ஜா ஆரம்பத்திலோ அல்லது இடையிலோ எந்த தோற்றத்தில்
( ء أ إ ؤ ئ ) வந்தாலும் அசலான உச்சரிப்பையே கொடுத்து ஓத வேண்டும்.
உதாரணம்: أعُوْذُ ، مُؤْمِنُ
ஹம்ஜத்துல் வஸ்ல்:
இதற்கு ஆறு வகையான சட்டங்கள் உள்ளன.
1. இரண்டு வார்த்தைகளுக்கு நடுவில் வந்தால் உச்சரிக்கக் கூடாது.
உதாரணம்: وَاللهِ ، وَاِذَ االْجِبَالِ
2. ஹம்ஸத்துல் வஸ்லை கொண்டு ஆரம்பமாகும் வார்த்தையின் இரண்டாம் எழுத்து லாம் சாகின் ஆக இருந்தால் ஹம்ஜத்துல் வஸ்லுக்கு ஃபத்ஹா ( َ ) வைத்தே ஓத வேண்டும்.
உதாரணம்: اَلْحَمْدُ ، اَلْاَرْضِ
3. فعل – امر (வினைச்சொல் – கட்டளை வாக்கியமாக) வந்தால், வார்த்தையின் மூன்றாம் எழுத்து பத்ஹா அல்லது கசரா பெற்று வந்தால் முதல் எழுத்தான ஹம்சத்துல் வஸ்லுக்கு கசரா வைத்தே ஓத வேண்டும்.
உதாரணம்: اِفْعَلْ ، اِضْرِبْ
4. فعل – امر (வினைச்சொல் – கட்டளை வாக்கியமாக) வந்தால், வார்த்தையின் மூன்றாம் எழுத்து ளம்மா பெற்று வந்தால் முதல் எழுத்தான ஹம்சத்துல் வஸ்லுக்கு ளம்மா வைத்தே ஓத வேண்டும்.
உதாரணம்: اُنْصُرْ ، اُقْتُلْ
5. வினைச்சொல் கட்டளை வாக்கியத்தில் பன்மையாக வரும்போது இரண்டாவது எழுத்து ஷத்தா ( ّ ) ஆக இருந்தால் அதை பிரித்துப் பார்த்து ஃபத்ஹா அல்லது கசரா இருக்குமானால், முதல் எழுத்தான ஹம்சத்துல் வஸ்லுக்கு கசரா கொடுத்து ஓத வேண்டும்.
உதாரணம்: اِتَّقُوْا – اِ تْ تَ قُ وْ
6. வினைச்சொல் கட்டளை வாக்கியத்தில் பன்மையாக வரும்போது இரண்டாவது எழுத்து ஷத்தா ( ّ ) ஆக இருந்தால் அதை பிரித்துப் பார்த்து ளம்மா இருக்குமானால், முதல் எழுத்தான ஹம்சத்துல் வஸ்லுக்கு ளம்மா கொடுத்து ஓத வேண்டும்.
7. ஹம்சத்துல் வஸ்லைக் கொண்டு ஆரம்பிக்கும் பெயர்ச்சொல் கசரவாகவே இருக்கும்.
உதாரணம்: اِبْرَاهِيْم ، اِسْمَاعِيْل ، اِسْحَاق ، اِبْلِيْس
ஹம்ஜாவின் வகைகள் |
0 Comments