தஜ்வீத் - மத்து சட்டங்கள்

 மத்து சட்டங்கள்:


மத்தா என்றால் நீட்டுதல் என்று பொருள்.

மத்து மூன்று வகைப்படும்.

அவை : 

  1. மத்து முத்தஸில்
  2. மத்து முன்ஃபஸில்
  3. மத்து லாஜிம்


மத்து முத்தஸில்:


ஒரு வார்த்தையின் நடுவில் மத்துடைய எழுத்து வந்து  அதற்கு அடுத்த எழுத்து ء வருமானால் அது மத்து முத்தஸில் ஆகும்.


மத்து முத்தஸிலை நான்கு ஹரகத் அளவு நீட்ட வேண்டும்


உதாரணம்شَآءَ , جَآءَ


மத்து முன்ஃபஸில்:


ஒரு வார்த்தையின் இறுதியில் மத்துடைய எழுத்து  வந்து அதற்கு அடுத்த வார்த்தையில் ء வருமானால் அது மத்து முன்ஃபஸில் ஆகும்.


மத்து முன்ஃபஸிலை நான்கு ஹரகத் அளவு நீட்ட வேண்டும்.


உதாரணம்اِنَّآ  اَنْزَلْنَاهُ


மத்து லாஜிம்:


மத்துடைய எழுத்துக்குப் பின் ஸுகூன் (  ْ ) அல்லது தஷ்தீத் (  ّ ) வந்தால் அது லாஜிம் ஆகும்.


மத்து லாஜிமை ஐந்து அலிஃப் அளவிற்கு நீட்ட வேண்டும்.


உதாரணம்: ضَآلاًّ ، حَآجُّوْكَ


மத்து வகைகள்
மத்து வகைகள்


பயிற்சி:

குர்ஆனில் இருந்து மத்து முத்தஸில் , மத்து முன்ஃபஸில், மத்து லாஜிம் ஆகியவற்றிற்கு 5 உதாரணங்களைக் கண்டறியவும்.

Post a Comment

0 Comments