بسم الله الرحمان الرحيم
அகீதா - தவ்ஹீத் அல் அஸ்மாவு வஸ்ஸிஃபாத் |
அல்லாஹ் தேவைகளற்றவன்:
சூரா அத்தாரியாத் வசனம் 57
مَآ أُرِيدُ مِنْهُم مِّن رِّزْقٍۢ وَمَآ أُرِيدُ أَن يُطْعِمُونِ
நான் அவர்களிடம் வாழ்வாதாரத்தை நாடவில்லை. அவர்கள் எனக்கு உணவளிக்க வேண்டும் என்றும் நாடவில்லை.
அல்லாஹ்விற்கு தூக்கமோ ஓய்வோ இல்லை:
சூரா அல் பகரா வசனம் 255
لَا تَأْخُذُهُۥ سِنَةٌۭ وَلَا نَوْمٌۭ ۚ
அவனுக்குச் சிறு உறக்கமோ, பெருந் தூக்கமோ ஏற்படாது.
சூரா அர்ரஹ்மான் வசனம் 29
يَسْـَٔلُهُۥ مَن فِى ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ كُلَّ يَوْمٍ هُوَ فِى شَأْنٍۢ
வானங்கள், பூமியில் உள்ளவர்கள் அவனிடமே வேண்டுகின்றனர். ஒவ்வொரு நாளும் அவன் இயக்கத்திலேயே இருக்கிறான்.
அல்லாஹ்விற்கு முடிவு இல்லை:
சூரா ஆலு இம்ரான் வசனம் 2
ٱللَّهُ لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ ٱلْحَىُّ ٱلْقَيُّومُ
அல்லாஹ்! அவனைத் தவிர எந்தக் கடவுளும் இல்லை. (அவன்) எப்போதும் உயிருடன் இருப்பவன்; நிலைத்திருப்பவன்.
அல்லாஹ்விற்கு களைப்பு இல்லை:
சூரா அல் காஃப் வசனம் 38
وَلَقَدْ خَلَقْنَا السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَا فِىْ سِتَّةِ اَيَّامٍۖ وَّمَا مَسَّنَا مِنْ لُّغُوْبٍ
நிச்சயமாக நாம் தாம் வானங்களையும், பூமியையும் அவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தோம்; (அதனால்) எத்தகைய களைப்பும் நம்மைத் தீண்டவில்லை.
அல்லாஹ்விற்கு மறதி இல்லை:
சூரா அத்தாஹா வசனம் 52
قَالَ عِلْمُهَا عِنْدَ رَبِّىْ فِىْ كِتٰبٍۚ لَا يَضِلُّ رَبِّىْ وَلَا يَنْسَى
“இது பற்றிய அறிவு என்னுடைய இறைவனிடம் (பதிவுப்) புத்தகத்தில் இருக்கிறது; என் இறைவன் தவறுவதுமில்லை; மறப்பதுமில்லை” என்று (மூஸா பதில்) சொன்னார்.
அவனே ஆரம்பமானவன் அவனே இறுதியானவன்:
சூரா அல்ஹதீத் வசனம் 3
هُوَ ٱلْأَوَّلُ وَٱلْـَٔاخِرُ وَٱلظَّـٰهِرُ وَٱلْبَاطِنُ ۖ وَهُوَ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌ
அவனே ஆரம்பமானவன்; இறுதியானவன்; வெளிப்படையானவன்; மறைவானவன். அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன்.
0 Comments