بسم الله الرحمان الرحيم
அல்லாஹ்வின் உருவம்
அகீதா - அல்லாஹ்வின் உருவம் |
நம் கற்பனைக்கு எட்டாத அளவில் அல்லாஹ்விற்கு உருவம் உண்டு. அல்லாஹ்வுக்கென்று ஒரு தனித் தோற்றம் உண்டு என்பதை அல்குர்ஆனிலிருந்தே நாம் ஏராளமான சான்றுகளைக் கொண்டு அறியலாம்.
திருமுகம் கொண்ட திருவாளன் அவன். மறுமையில் சொர்க்கவாசிகள் அல்லாஹ்வை பார்க்கலாம்.
1. அல்லாஹ்வின் முகம்:
كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ
وَيَبْقَىٰ وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ
இதில் உள்ள அனைவரும் அழிபவர்கள். மகத்துவமும், கண்ணியமும் மிக்க உமது இறைவனின் முகமே மிஞ்சும்.
2. அல்லாஹ்வின் கண், காது:
சூரா அஷ்ஷூரா வசனம் 11
وَهُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ
அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன்.
சூரா அத்தூர் வசனம் 48
وَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ فَاِنَّكَ بِاَعْيُنِنَا وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ حِيْنَ تَقُوْمُۙ
எனவே (நபியே!) உம்முடைய இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக; நிச்சயமாக நீர் நம் கண்காணிப்பில் இருக்கின்றீர்; மேலும் நீங்கள் எழுந்திருக்கும் சமயத்தில் உம் இறைவனின் புகழைக் கூறித் தஸ்பீஹு செய்வீராக,
3. அல்லாஹ்வின் வாய்:
وَكَلَّمَ اللَّهُ مُوسَىٰ تَكْلِيمًا
சூரா அந்நிஸா வசனம் 164
அல்லாஹ் மூஸாவுடன் உண்மையாகவே பேசினான்.
அல்லாஹ் சிரிக்கிறான்:
ஹதீஸ்:
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் இரண்டு மனிதர்களைப் பார்த்து சிரிக்கின்றான். அவ்விருவரில் ஒருவர் மற்றொருவரைக் கொன்று விட்டார். இருவருமே சுவர்க்கத்தில் நுழைகின்றார்கள். இவர் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்படுகின்றார். பிறகு கொன்றவர் பாவ மன்னிப்பு கோர அதை அல்லாஹ் மன்னித்து விடுகின்றான். பிறகு அவரும் அறப்போரில் உயிர் தியாகியாகி விடுகின்றார்.
நூல்: புகாரி 2826
0 Comments