بسم الله الرحمان الرحيم
அகீதா - அல்லாஹ்வின் உருவம் |
4. அல்லாஹ்வின் கை:
சூரா அல் மாயிதா வசனம் 64
وَقَالَتِ الْيَهُودُ يَدُ اللَّهِ مَغْلُولَةٌ ۚ غُلَّتْ أَيْدِيهِمْ وَلُعِنُوا بِمَا قَالُوا ۘ بَلْ يَدَاهُ مَبْسُوطَتَانِ يُنفِقُ كَيْفَ يَشَاءُ
‘அல்லாஹ்வின் கை கட்டப்பட்டுள்ளது’ என்று யூதர்கள் கூறுகின்றனர். அவர்களின் கைகயே கட்டப்பட்டுள்ளன. அவர்களது இக்கூற்றின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டனர். மாறாக அவனது இரு கைகளும் விரிக்கப்பட்டே உள்ளன. அவன் நாடியவாறு வழங்குவான்.
சூரா அஸ் ஸாத் வசனம் 75
قَالَ يَا إِبْلِيسُ مَا مَنَعَكَ أَن تَسْجُدَ لِمَا خَلَقْتُ بِيَدَيَّ ۖ أَسْتَكْبَرْتَ أَمْ كُنتَ مِنَ الْعَالِينَ
எனது இரு கைகளால் நான் படைத்ததற்கு நீ பணிவதை விட்டும் எது உன்னைத் தடுத்தது? அகந்தை கொண்டு விட்டாயா? அல்லது உயர்ந்தவனாக ஆகி விட்டாயா?’ என்று (இறைவன்) கேட்டான்.
ஹதீஸ்:
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமைநாளில் வானங்களைச் சுருட்டுவான். பிறகு அவற்றைத் தனது வலக் கரத்தில் எடுத்துக்கொள்வான். பிறகு “நானே அரசன். அடக்குமுறையாளர்கள் எங்கே? ஆணவம் கொண்டவர்கள் எங்கே?” என்று கேட்பான். பிறகு பூமிகளைத் தனது இடக் கரத்தில் சுருட்டிக்கொள்வான். பிறகு “நானே அரசன். அடக்கு முறையாளர்கள் எங்கே? ஆணவம் கொண்டவர்கள் எங்கே?” என்று கேட்பான்.
முஸ்லிம் 5376
5. அல்லாஹ்வின் விரல்:
ஹதீஸ்:
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி)
ஒரு யூதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து ‘முஹம்மதே! அல்லாஹ் (மறுமை நாளில்) வானங்களை ஒருவிரலின் மீதும் பூமிகளை ஒருவிரலின் மீதும் மலைகளை ஒரு விரலின் மீதும் மரத்தை ஒரு விரலின் மீதும் (இதர) படைப்புகளை ஒரு விரலின் மீதும் நிறுத்திக்கொண்டு, ‘நானே அரசன்’ என்று கூறுவான்’ என்றார்.
(இதைக் கேட்ட) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் வெளியே தெரியச் சிரித்துவிட்டு, ‘அவர்கள் அல்லாஹ்வை எப்படி மதிக்க வேண்டுமோ அப்படி மதிக்கவில்லை’ எனும் (யூதர்களைப் பற்றிய 6:91 வது) வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.
மற்றோர் அறிவிப்பில் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்:
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘இந்த யூதரின் சொல்லைக் கேட்டு வியப்படைந்து, அதை உறுதிப்படுத்தும் வகையில் சிரித்தார்கள்.
6. அல்லாஹ்வின் கால்:
ஹதீஸ் 1:
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உயர்ந்தோன் அல்லாஹ் கூறினான் "என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கிறானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்துகொள்வேன். அவன் என்னை நினைவு கூரும்போது நான் அவனுடன் இருப்பேன். அவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைவுகூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவுகூருவேன். அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவு கூருவேன். அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழுமளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் (வலதும் இடதுமாக விரித்த) இரண்டு கைகளின் நீள அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச் செல்வேன்"
புகாரி 7405
ஹதீஸ் 2:
அறிவிப்பவர்: அனஸ் (ரழி)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(நரகவாசிகள்) நரகத்தில் போடப்படுவார்கள். நரகம், ‘இன்னும் அதிகம் இருக்கின்றதா?’ என்று கேட்கும். இறுதியில் அல்லாஹ் தனது பாதத்தை (அதில்) வைப்பான். அப்போது அது, ‘போதும், போதும்’ என்று கூறும்.
நூல்: புகாரி 4848-4849, முஸ்லிம் 5084.
ஆனால், அவனது அந்தத் தோற்றத்திற்கு – அவனது தனித் தன்மைக்கு ஈடு இணை கிடையாது, ஒப்புவமை இல்லை.
சூரா அஷ்ஷூரா வசனம் 11
لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ ۖ
அவனைப் போல் எதுவும் இல்லை.
இந்த அடிப்படையில் இதுவரை நாம் எடுத்துக் காட்டிய குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்களிலிருந்து அல்லாஹ்வுக்கென்று ஓர் அழகிய திருமுகம், கண்கள், செவிப் புலன்கள், பேசும் ஆற்றல் உள்ளன என்று விளங்கிக் கொள்கிறோம்.
0 Comments